ஏப்ரல் 04, அரியலூர் (Ariyalur News): அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடத்தை சேர்ந்த அபிமணி (வயது 22) என்பவர் 7-ஆம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமியை காதலிப்பதாகக்கூறி, அவரை பாலியல் பலாத்காரம் (A Boy And Teacher Raped A Minor Girl Arrested In Pocso Act) செய்துள்ளார். இதனை, பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர் ஹெரால்டு சகாயராஜ் (வயது 52) என்பவரிடம் சிறுமி கூறியுள்ளார். இந்நிலையில், இவர் சிறுமியை விசாரிப்பதாக கூறி தனது வீட்டிற்கு கூட்டிச் சென்று, பலமுறை பலாத்காரம் செய்து வந்துள்ளார். Train Collided Two Workers Died: ரயில் மோதி விபத்து; 2 பேர் பலி..!தண்டவாளத்தை கடக்க முயன்ற போது நேர்ந்த சோகம்..!

இதனையடுத்து சிறுமி மிகவும் சோர்வாக இருந்துள்ளார். பெற்றோர் விசாரித்ததில், சிறுமி நடந்தவைகளை கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இதுபற்றி முறையிட்டுள்ளனர். ஆனால், எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர், 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, அவர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அபிமணி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஹெரால்டு சகாயராஜ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.