Railway Track (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 04, திருவள்ளூர் (Tiruvallur News): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த சில தொழிலாளர்கள் பெயிண்டிங் வேலைக்காக (Painters Died In Train Collision) இங்கு வந்து அவர்கள் தங்கிருந்து வேலைகளை செய்து வந்துள்ளனர். பெயிண்டிங் வேலைகள் முடிவடைந்த நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக 4 தொழிலாளர்கள் பொன்னேரி ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். A Boiler Exploded In Pharmaceutical Factory: மருந்து தொழிற்சாலையில் பயங்கரம்; தொழிலாளர்கள் 5 பேர் பலி – 14 பேர் படுகாயம்..!

இந்நிலையில், சேகர் மற்றும் சுப்பிரமணி ஆகிய 2 பேரும் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, சென்னையில் இருந்து வந்த ரயில் இவர்கள் இருவர்மீதும் மோதியது. இவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.

இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சேகர மற்றும் சுப்பிரமணி இவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சோகத்தில் ஆழ்த்தியது.