School Teacher Rape: பள்ளி ஆசிரியை பாலியல் பலாத்காரம்; போதை ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி அத்துமீறல்..!
சென்னையில் வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கிய பள்ளி ஆசிரியை, போதை ஆசாமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மே 09, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள கோயம்பேடு பகுதியில் வசித்து வரும் 31 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். Colleges Denied Admission To Transgender Student: தேர்வில் வெற்றி பெற்றும் மறுக்கப்படும் கல்லூரி படிப்பு; திருநங்கை அஜிதாவுக்கு நேர்ந்த துயரம்..!
இந்நிலையில், இரவு நேரங்களில் இவரது கணவர் ஆட்டோ ஓட்ட சென்றுவிடுவாதல், இவர் தனது 2 குழந்தைகளுடன் இரவில் தனியாக இருந்து வந்துள்ளார். இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு வீட்டில் வெயிலின் தாக்கத்தினால் வெக்கையாக இருந்துள்ளது. இதன்காரணமாக, கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளனர். அப்போது, குடிபோதையில் இருந்த ஒருவர் வீட்டிற்குள் சென்று, அந்த இளம்பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதில், அதிர்ச்சியடைந்த அவர் சத்தமிட முயன்றுள்ளார். ஆனால், அவர் கத்தி கூச்சலிட்டால் 2 குழந்தைகளையும் கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
பின்னர், அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் (Rape) செய்துவிட்டு, அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிய முயன்றுள்ளார். அப்போது, சத்தம்போட்டு கத்தியுள்ளார். உடனடியாக வந்த அக்கம்பக்கத்தினர் அவரை விரட்டி மடக்கி பிடித்து, சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர். இதனையடுத்து, அவரை கோயம்பேடு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட போதை ஆசாமி கோயம்பேடு பகுதியை சேர்ந்த ஜான் பால்ராஜ் (வயது 38) என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on May 09, 2024 02:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

