Transgender Ajitha (Photo Credit: YouTube)

மே 09, கோயம்புத்தூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி அஜிதா, திருநங்கை (Transgender Ajitha). இவர், வடகோவை பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து பொதுத் தேர்வில் 373 மதிப்பெண் பெற்றார். இந்நிலையில், தான் பி.எஸ்சி. உளவியல் (B.Sc. Psychology) படிக்க வேண்டும் என்ற ஆசையோடு பல கல்லூரிகளுக்கு இவர் சென்று வந்துள்ளார். ஆனால், இவருக்கு அனைத்து கல்லூரிகளிலும் மறுப்புத் தெரிவித்துள்ளனர். அதிலும், பெண்கள் பயிலும் கல்லூரிகளில் கூட இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. Married Woman Suicide: குடும்ப தகராறு காரணமாக குழந்தைகளை கொன்றுவிட்டு, இளம்பெண் தற்கொலை..!

கல்லூரிகளில் அனுமதி மறுப்பு: இதனையடுத்து திருநங்கை அஜிதா கூறுகையில், 'வடகோவை பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்துள்ள நான், தற்போது தேர்ச்சி பெற்று மேற்கொண்டு, பி.எஸ்சி. உளவியல் படிக்க வேண்டும் என்று கனவோடு இருந்தேன். ஆனால், கோயம்புத்தூரில் உள்ள நான் சென்று வந்த பல கல்லூரிகளில் அனுமதி கேட்டபோது, தன்னை திருநங்கை மாணவி என்பதால் உடன் படிக்கும் மற்ற மாணவர்களுக்கு பிரச்சனை நிலவக்கூடும் எனக் கூறி மறுப்பு தெரிவித்தனர். மேலும், வடகோவை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் அனுமதி கேட்டபோது, கல்லூரி நிர்வாகிகள் உங்களால் மற்ற பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறினர்.

மாணவி வலியுறுத்தல்: மேற்கொண்டு, நீங்கள் எந்த கழிவறையை பயன்படுத்துவீர்கள்? என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள். இது எனக்கு மிகுந்த மனவேதனையை உண்டாக்கியது. தொடர்ந்து பல கல்லூரிகளுக்கு சென்று வந்த நிலையில், தற்போது கவுண்டர் மில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் எனக்கு சீட் கிடைத்துள்ளது. திருநங்கைகளுக்கு தொடர்ந்து இந்த சமுதாயத்தில் கல்வி நிராகரிக்கப்பட்டு வருவது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு, அரசு தலையிட்டு திருநங்கைகளுக்கு உயர்கல்வி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று அவர் கூறியுள்ளார்.

கலையின் மீது ஆர்வம் கொண்டு பல சாதனைகளை படைத்த திருநங்கை அஜிதா (பழைய காணொளி):