Blade Cut To Female Police: கோவில் திருவிழாவில் பெண் காவலருக்கு பிளேடால் வெட்டு.. 6 பேர் கைது..!

சென்னையில் நடந்த கோவில் திருவிழாவில் பெண் காவலரை பிளேடால் வெட்டிய சம்பவத்தில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Blade Cut To Female Police: கோவில் திருவிழாவில் பெண் காவலருக்கு பிளேடால் வெட்டு.. 6 பேர் கைது..!
Arrest (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 27, ராயப்பேட்டை (Chennai News): சென்னையில் உள்ள ராயப்பேட்டை விஎம் தெருவில் முண்டகக்கன்னி அம்மன் கோவில் (Mundakakanni Amman Temple) உள்ளது. இங்கு நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 25) திருவிழா (Festival) நடைபெற்றது. விழா நடந்துகொண்டிருந்தபோது, சிலர் மதுபோதையில் ஆடிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். Trichy Horror: மருத்துவர்களின் ஆலோசனையின்றி கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்ட பெண்.. பரிதாபமாக உயிரிழப்பு..!

இதனால், ஆத்திரமடைந்த ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் (Blade), பணியில் இருந்த பெண் காவலர் கவுசல்யாவின் வலது கையில் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த பெண் காவலரை, பணியில் இருந்த மற்ற காவலர்கள் மீட்டு, உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு கவுசல்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மதுபோதையில் ஆடிய அஜய் ராகுல் (வயது 23), ஸ்ரீதர் (வயது 22), சசிகுமார் (வயது 20), சரவணன் (வயது 20), கிஷோர் (வயது 19), மணிகண்டன் (வயது 19) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும், பெண் காவலரை பிளேடால் வெட்டி நபர் அஜய் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).