ஆகஸ்ட் 27, திருச்சி (Trichy News): திருச்சி மாவட்டம் மருங்காபுரி அடுத்த லிங்கம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி வீரம்மாள் (வயது 34). இவர்களுக்கு 3 மகள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் சென்னையில் இடியாப்ப வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் மீண்டும் வீரம்மாள் கர்ப்பமானார். 5 ஆவதாக கருத்தரித்த நிலையில் மருத்துவர்களின் ஆலோசனை இன்றி கருக்கலைப்பு மாத்திரை (Abortion Pills) எடுத்துள்ளார். இதனால் வீரம்மாளின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார்.
குறிப்பு: அரசு கொடுத்துள்ள வழிகாட்டுதலின் படி கருக்கலைப்பை 4 வாரங்களில் இருந்து 12 வாரங்களுக்குள் மட்டும் தான் செய்ய வேண்டும். அதுவும் மூன்று அல்லது நான்கு குழந்தைகள் பெற்ற பெண்கள், இருதய கோளாறு மற்றும் மனநல பாதிப்பு உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே இந்த 4 வாரங்களில் இருந்து 12 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்யலாம். 12 வாரங்களில் இருந்து 20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்ய இரண்டு மகப்பேறு மருத்துவர்கள் பரிந்துரை செய்து அவர்களது அனுமதி கையெழுத்து பெற்ற பிறகே செய்ய முடியும். 20 வாரங்களைக் கடந்த பிறகு கருக்கலைப்பு செய்ய, அரசு ஒருசில மருத்துவமனைகளுக்குக் கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. அந்த மருத்துவமனைகளில் மட்டுமே கலைப்பு செய்ய வேண்டும். Trichy Shocker: இரயில் நிற்பதற்குள் அவசரம்; நூலிழையில் உயிர்தப்பிய முன்னாள் இரயில்வே பணியாளர்.. திருச்சி இரயில் நிலையத்தில் அதிர்ச்சி.!
20 வாரங்களுக்குள் மேல் அல்லது 5 மாதத்திற்கு மேல் கருக்கலைப்பு செய்ய முற்பட்டால், கருவில் உள்ள குழந்தைக்கு எதாவது பாதிப்பு இருந்து அதைச் சரி செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய வேண்டும். மருந்தகங்களில் மருத்துவர் பரிந்துரை செய்யாத மருத்துவச்சீட்டு இன்றி கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கக்கூடாது. மகப்பேறு மருத்துவர்களிடம் மட்டுமே கருக்கலைப்பு செய்து கொள்ள வேண்டும். வேறு எந்த மருத்துவர்களிடம் செய்துகொள்ளக் கூடாது.