Minor Girl Pregnant: 17 வயது சிறுமி கர்ப்பம்.. காதலன் போக்சோவில் கைது..!

சென்னையில் 17 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Minor Girl Pregnant: 17 வயது சிறுமி கர்ப்பம்.. காதலன் போக்சோவில் கைது..!
Sexual Abuse / Rape Representational Image (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 20, பெரம்பூர் (Chennai News): சென்னை, ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அயனாவரம் பகுதியில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்தார். அப்போது, அதே பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்த மகாலிங்கம் என்ற மனோஜை சிறுமி காதலித்து (Love Affair) வந்துள்ளார். Gang Rape in Manamadurai: ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் ஐவர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; மானாமதுரையில் பயங்கரம்.!

இதனையடுத்து, மனோஜ் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, அவரது வீட்டிற்கு சிறுமியை அழைத்துச்சென்று பலமுறை பலாத்காரம் (Rape) செய்துள்ளார். இதனால், கடந்த 9-ஆம் தேதி சிறுமிக்கு உடல் நலக்குறைபாடு ஏற்பட்டுள்ளது. பின்னர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டபோது, சிறுமி 2 மாத கர்ப்பமாக (Pregnancy) இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவலை சிறுமி தனது காதலன் மனோஜிடம் தெரிவித்தபோது, அதனை அவர் அலட்சியப்படுத்தி சிறுமியை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார்.

இதன்பின்னர், காதலனின் தாயாரிடம் இதுகுறித்து கூறியபோது, அவரும் சிறுமியை திட்டி அனுப்பியுள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி தனது தாயாருடன், அயனாவரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், நேற்று (செப்டம்பர் 19) ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டை நல்லையா நாயுடு தெருவை சேர்ந்த மனோஜ் (வயது 23) என்ற வாலிபரை கைது செய்தனர். மேலும், அவர் மீது போக்சோ சட்டத்தின் (Pocso Act) கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Sep 20, 2024 10:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).