Gang Rape in Manamadurai: ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் ஐவர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; மானாமதுரையில் பயங்கரம்.!

மானாமதுரை பகுதியில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண், காட்டுப்பகுதிக்கு தூக்கிச் செல்லப்பட்டு கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பதறவைக்கும் துயரம் நடந்துள்ளது.

Gang Rape in Manamadurai: ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் ஐவர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; மானாமதுரையில் பயங்கரம்.!
Manamadurai Sipcot Police Station (Photo Credit: @TamilJanam X)

செப்டம்பர் 19, மானாமதுரை (Sivaganga News): சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை (Manamadurai) அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், சம்பவத்தன்று தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்ததாக தெரியவருகிறது. அச்சமயம் அங்கு வந்த கும்பல் ஒன்று, பெண்ணுடன் இருந்த ஆண் நபரை கடுமையாக தாக்கி இருக்கிறது. Chennai Shocker: 32 வயது பெண்ணை கண்டந்துண்டமாக வெட்டிக் கொன்றது ஏன்? - சூட்கேசில் பெண் சடலம் மீட்கப்பட்டதில், குற்றவாளி பகீர் வாக்குமூலம்.! 

ஐவர் கும்பலால் கொடுமை:

பின் பெண்ணை சுற்றிவளைத்த ஐவர் கும்பல், அவரை மறைவான காட்டுப்பகுதிக்கு தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. ஐவராக கூட்டுப்பாலியல் பலாத்காரத்தை அரங்கேற்றிய கும்பல், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவதாக மிரட்டி இருக்கிறது. இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி மானாமதுரை சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காவல் நிலையத்தில் புகார்:

பெண்ணின் புகாரை ஏற்ற அதிகாரிகள், பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து குற்றவாளிகளுக்கு வலைவீசி இருக்கின்றனர். காயமடைந்த பெண்ணின் ஆண் நண்பர்,  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார் .  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் கொலை, கற்பழிப்பு போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகம் நடந்து வருகின்றன.

இதனிடையே, இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதும் நடந்துள்ளது. தனிமனிதனின் சுய ஒழுக்கமின்மை, கடுமையான தண்டனைகள் இல்லாமையே இவ்வாறான குற்றங்களுக்கு முதல் காரணமாகவும் அமைகிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

(The above story first appeared on LatestLY on Sep 19, 2024 04:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).