Aavin Green Magic Milk: ஆவின் பால் விலை அதிகரிப்பு? ஆவின் நிறுவனம் விளக்கம்.!

ரூ.11 ஆவின் பச்சை மேஜிக் ப்ளஸ் பால் அறிமுகம் செய்யப்பட்டு விலை உயர்த்தப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஆவின் விளக்கம் அளித்துள்ளது.

Aavin Green Magic Milk (Photo Credit: @Mumukshuthvam21 X)

அக்டோபர் 19, சென்னை (Chennai News): ஆவின் பால் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் சார்பில், தமிழ்நாட்டில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் கண்காணிப்பில் இயங்கும் ஆவின் நிறுவனம், தொடர்ந்து தினமும் மக்களுக்கான பால் & பால் பொருட்கள் விநியோகத்தை கையாண்டு வருகிறது. ஆவின் பாலில் பல வகைகள் இருக்கின்றன. இந்நிலையில், ஆவின் கிரீன் பால் உற்பத்தி நிறுத்தப்பட்டு, கிரீன் மேஜிக் ப்ளஸ் என்ற பெயரில் அதன் விலை ரூ.11 உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. Tamil Thaai Vaalthu: தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்; 1960 நினைப்புகளில் திமுக?.. மத்திய அமைச்சர் எல்.முருகன் விளாசல்.! 

புதிய வகை பால் அறிமுகத்திற்கு ஆய்வு:

இந்நிலையில், இந்த விசயத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஆவின்‌ நிறுவனம்‌, பச்சை நிற பால் குறித்து விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், "ஆவினின் நிலைப்படுத்தப்பட்ட பாலின்‌ (பச்சை நிற பால்‌) விற்பனை குறைப்பு மற்றும்‌ உற்பத்தி நிறுத்தம்‌ என்று எந்த ஒரு முடிவையும்‌ எடுக்கவில்லை. மக்கள்‌ நலன்‌ கருதி, எதிர்வரும்‌ பால்‌ தேவையை கருத்தில்‌ கொண்டும்‌ மற்றும்‌ பால்‌ சந்தையில்‌ அனைவரும்‌ விரும்பும்‌ வகையில்‌ வைட்டமின்‌ ஏ மற்றும்‌ டி செறிவூட்டப்பட்டு மற்றும்‌ இதர கொழுப்புச்‌ சத்துக்களை சற்று உயர்த்தி புதிய வகையான பாலினை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும்‌ பொது மக்களிடம்‌ கருத்துக்கள்‌ கேட்கப்பட உள்ளது. மேலும்‌ எந்த விதமான புதிய வகை பாலையும்‌ இதுவரை ஆவின்‌ விற்பனை செய்ய தொடங்கவில்லை என்பதை தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌. ஆவின்‌ நிறுவனம்‌ புதிய வகையான பால்‌ விற்பனை தொடங்கும்‌ பட்சத்தில்‌ அனைத்து ஊடகங்களுக்கும்‌ தெரிவித்த பின்னரே தொடங்கப்படும்‌" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement