வானிலை: தமிழகத்தில் சுட்டெரிக்கப்போகும் வெயில் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழகத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 06, நுங்கம்பாக்கம் (Chennai News): தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (6-2-2025) பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
வானிலை (Weather):
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (7-02-2025) பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 8 முதல் 12ஆம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். Rahul Gandhi: ஆர்.எஸ்.எஸ் மயமாகும் கல்வி? ராகுல் காந்தி பகிரங்க கண்டனத்துடன் எச்சரிக்கை.!
சென்னை (Chennai Weather) மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast Today):
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (6-2-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.
(The above story first appeared on LatestLY on Feb 06, 2025 02:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

