DMK Student Wing Protest in Delhi 06 Feb 2025 (Photo Credit @PTI_News X @ANI X)

பிப்ரவரி 06, ஜந்தர் மந்தர் (New Delhi News): தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில், மத்திய அரசு அமல்படுத்தி இருக்கும் பல்கலைக்கழகங்களுக்கான யுஜிசி விதிகளை எதிர்த்து, இன்று திமுக மாணவரணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் & கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் திமுக மூத்த தலைவர்கள், திமுக கூட்டணி கட்சியின் தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். திமுக எம்.பி கனிமொழி (Kanimozhi), திருச்சி சிவா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ (Vaiko) உட்பட பல தலைவர்களும் போராட்டத்தில் நேரில் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராக தங்களின் வாதங்களை முன்வைத்து இருந்தனர். திருப்பூரில் தனியார் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து.. கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி.. 40 பேர் படுகாயம்.! 

மாநிலத்தின் கலாச்சாரம், மொழிக்கு மதிப்பளிக்க வேண்டும்:

அந்த வகையில், திமுகவின் தேசிய கூட்டணியில் முக்கிய கட்சியாக இடம்பெற்று இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், "பல மொழிகள் இணைந்தே இந்திய தேசம் உருவாகியது. மாநிலத்தை ஒருங்கிணைப்பதே இந்தியா. யுஜிசி மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பறிக்க முற்படுகிறது. அனைத்து மாநிலத்தின் கலாச்சாரம், மொழிக்கு மதிப்பளிக்க வேண்டும். காங்கிரஸ் அந்த வாக்குறுதியை உங்களுக்கு வழங்குகிறது. கல்வி ஆர்.எஸ்.எஸ் மயமாக்கப்பட்ட முயற்சி நடந்து வருகிறது. நாங்கள் ஆர்.எஸ்.எஸ் கொள்கையை, அவர்களின் கல்வி திட்டத்தை ஒருபோதும் இந்தியாவில் அனுமதிக்கமாட்டோம். அதற்காக எந்த வகையிலான போராட்டத்தையும் நாங்கள் முன்னெடுப்போம். இதுபோல பல போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்" என பேசினார்.

ராகுல் காந்தி திமுக மாணவரணி & எம்.பிக்கள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டபோது:

யுஜிசி-க்கு எதிரான போராட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றியபோது: