![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/1720600433Tomorrow%20weather%201.jpg?width=380&height=214)
பிப்ரவரி 07, நுங்கம்பாக்கம் (Chennai News): தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (8-2-2025) முதல் வரும் 13ஆம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 8-Year-Old Girl Harassed: மணப்பாறையில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்; குவியும் புகார்.. அதிர்ச்சியில் திருச்சி மக்கள்.!
சென்னை (Chennai Weather) மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast Today):
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (7-2-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.