Accuse Vasantha Kumar | Peoples Protest (Photo Credit: @dmdk_arjun2025 / @_sivakannu X)

பிப்ரவரி 07, மணப்பாறை (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில், குரு வித்யாலயா என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி, நான்காம் வகுப்பு பயின்று படித்து வருகிறார். சம்பவத்தன்று, பள்ளியில் இருந்த சிறுமிக்கு, பள்ளியின் தாளாளர் சுதாவின் கணவர் வசந்த குமார் (வயது 54) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். வீட்டிற்கு சென்ற மாணவி, பெற்றோரிடம் விபரத்தை தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேராக பள்ளிக்குச் சென்று முறையிட்டனர். அங்கு பள்ளி நிர்வாகத்தினர் உரிய பதில் தரவில்லை. இதனால் பள்ளியின் கீழ்தளத்தில் இருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கி, மணப்பாறையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர். மேலும், புகாரை பெற்றுக்கொண்டனர். Iruttukadai Halwa: இருட்டுக்கடை அல்வாவை ருசித்த முதல்வர்; மக்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி பயணம்.! 

காவல்துறையினர் தொடர் விசாரணை:

இதன்பேரில் நடந்த விசாரணையைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர் சுதா, சுதாவின் கணவர் வசந்த குமார், பள்ளியின் நிர்வாகிகள் இளஞ்செழியன், மாராச்சி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவாக இருந்த பள்ளியின் முதல்வர் ஜெயலட்சுமி இன்று காலை காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த விஷயம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், காவல் ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும், மாவட்ட கல்வி அலுவலர் பேபி தலைமையிலான அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பள்ளியின் தாளாளர் கணவர் மீது மற்றொரு மாணவி புகார் அளித்துள்ளார். 4ம் வகுப்பு மாணவி புகார் அளித்ததைப்போல, ஐந்தாம் வகுப்பு மாணவியும் புகார் அளித்துள்ளார். மணப்பாறை காவல் நிலையத்தில் வசந்தகுமாருக்கு எதிராக மற்றொரு புகாராக கொடுக்கப்பட்டுள்ளதால், காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.

பள்ளி மாணவிக்கு நியாயம் கேட்டு சாலை மறியல் போராட்டம்: