Kamal Haasan Casted Vote: "இந்த தேர்தல் எல்லா தேர்தலைவிடவும் முக்கியம்".. வாக்காளர்கள் கண்டு வியக்க வாக்களித்துவிட்டு பேசிய உலக நாயகன்..!

சென்னை தேனாம்பேட்டையில் தனது வாக்கை செலுத்தினார் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன்.

Kamal Haasan Casted Vote:
Kamal Haasan Casted Vote (Photo Credit: @ANI X)

ஏப்ரல் 19, சென்னை (Chennai): இந்திய நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தல் (Lok Shaba Elections 2024) ஆனது நாடு முழுவதும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா தேர்தல்கள் 2024-ன்  வாக்கு பதிவானது இன்று தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக இன்று 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சரியாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. Actor Vijay Sethupathi Casted Vote: மக்களின் செல்வனாக.. ஜனநாயக கடமையாற்றிய விஜய் சேதுபதி..!

தொடர்ந்து மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் தனது வாக்கை செலுத்தினார் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் (Actor and MNM chief Kamal Haasan). அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எல்லா தேர்தலும் முக்கியமானது தான். இந்த தேர்தல் எல்லா தேர்தலைவிடவும் முக்கியம் அதனால், எல்லோரும் நிச்சயம் வாக்களிக்க வேண்டும். இந்தியா வாழ்க! தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க!” என்று கூறினார். மக்கள் நீதி மய்யம் கட்சி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை, இருப்பினும் அக்கட்சி திமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

(The above story first appeared on LatestLY on Apr 19, 2024 12:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).