ஏப்ரல் 19, சென்னை (Chennai): இந்திய நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தல் (Lok Shaba Elections 2024) ஆனது நாடு முழுவதும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா தேர்தல்கள் 2024-ன்  வாக்கு பதிவானது இன்று தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக இன்று 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சரியாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. Newly Married Couple Cast Their Vote: விறுவிறுப்பாக நடைபெறும் வாக்களிப்பு பணிகள்.. திருமணமான கையோடு வந்து ஓட்டு போட்ட புதுமண தம்பதிகள்..!

தொடர்ந்து மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் சேதுபதி (Actor Vijay Sethupathi) வாக்களித்தார். விஜய் சேதுபதி, துவக்கத்தில் துணை பாத்திரங்களில் நடித்து பிறகு நடிகராக அறிமுகமானவர். குறிப்பாக அவர் தென்மேற்கு பருவக்காற்று, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், போன்ற சில படங்களில் நடித்த பிறகுதான் ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிமானத்தை பெற்றார். கடந்த ஆண்டில் ஜவான் என்ற இந்தி படத்தில் ஷாருக்கானுக்கும் வில்லனாக நடித்துவிட்டு வந்துவிட்டார்.