Kalidas Jayaram Marriage: நடிகர் காளிதாஸ் ஜெயராம் திருமணம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் ஜெயராம் குடும்பத்துடன் நேரில் அழைப்பு..!

நடிகர் ஜெயராம் தன் மகன் காளிதாஸ் ஜெயராம் திருமண நிகழ்வில் பங்கேற்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.

Kalidas Jayaram Marriage: நடிகர் காளிதாஸ் ஜெயராம் திருமணம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் ஜெயராம் குடும்பத்துடன் நேரில் அழைப்பு..!
Kalidas Jayaram (Photo Credit: Instagram)

அக்டோபர் 10, சென்னை (Cinema News): பிரபல நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ் ஜெயராம் (Kalidas Jayaram) தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே தேசிய விருதைப் பெற்றவர். பா.ரஞ்சித் இயக்கிய ‘நட்சத்திரம் நகர்கிறது’, கமலின் ‘விக்ரம்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் பிரபல மாடல் அழகி தாரிணிக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், திருமண நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்தது. TP Madhavan Passes Away: பிரபல மலையாள நடிகர் டிபி மாதவன் திடீர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி.!

தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகின்றது. காளிதாஸ் ஜெயராம் திருமணம் நவம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை (TN Chief Minister MK Stalin) நேரில் சந்தித்து நடிகர் ஜெயராம் குடும்பத்துடன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து காளிதாஸ் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்பத்தாருடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை சந்தித்து திருமணத்திற்கு அழைப்பிதழை வழங்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

காளிதாஸ் திருமண நிகழ்வில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் ஜெயராம் குடும்பத்துடன் நேரில் அழைப்பு:

 

View this post on Instagram

 

A post shared by Kalidas Jayaram (@kalidas_jayaram)

(The above story first appeared on LatestLY on Oct 10, 2024 12:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).