Actor Pradeep K Vijayan Death: வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல தமிழ் நடிகர் பிரதீப் கே விஜயன்.. திரையுலகினர் அதிர்ச்சி.!
தமிழ் நகைச்சுவை நடிகர் பிரதீப் கே விஜயன் பாலவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் தலையில் காயத்துடன் உயிரிழந்துள்ளார்.
ஜூன் 13, பாலவாக்கம் (Chennai News): தமிழில் ஒருசில படங்களில் வில்லனாகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ள நடிகர் பிரதீப் விஜயன் (Actor Pradeep K Vijayan) நேற்று (ஜூன் 12) அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். நடிகர் பிரதீப் கே விஜயனுக்கு திருமணமாகாததால், சென்னையில் உள்ள பாலவாக்கம் சங்கராபுரம் முதல் தெருவில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது நண்பர், பிரதீப்பை பலமுறை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். தொடர்ந்து இரண்டு நாட்களாகியும் எந்தவித பதிலும் வராததால், நண்பர் அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார். YouTuber Shikha Metray Arrested: குழந்தைகளை பாலியல் ரீதியில் ஊக்குவிக்கும் வீடியோக்களை பதிவிட்ட யூடியூபர் கைது; சமூக ஆர்வலர் அளித்த புகாரில் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!
அங்கு வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததால், நண்பர் பலமுறை தட்டியும் பிரதீப் திறக்கவில்லை. இதனால், சந்தேகத்தின் பேரில் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த நீலாங்கரை காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, தலையில் காயத்துடன் பிரதீப் இறந்து கிடந்தார். அவரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த விசாரணையில், தலையில் காயம் மற்றும் மாரடைப்பு காரணமாக பிரதீப் 2 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த பிறகே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
(The above story first appeared on LatestLY on Jun 13, 2024 05:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

