YouTuber Shikha Metray (Photo Credit: @PRAJJWAL100000 X)

ஜூன் 13, காசியாபாத் (Uttar Pradesh News): சிறுவர்கள் மற்றும் புதிதாக பிறக்கும் குழந்தைகளை பாலியல் ரீதியில் ஊக்குவிக்கும் முறைகள் குறித்த வீடியோவை விளம்பரப்படுத்திய குற்றச்சாட்டில் 'குவாரி பேகம்' (Kuwari Begum) என்ற யூடியூபர் ஷிகா மேத்ரே, காசியாபாத் காவல்துறையினரால் இன்று (ஜூன் 13) கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஆர்வலர் ஒருவரின் புகாரின் அடிப்படையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பின்னர் யூடியூபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். Human Finger In Ice Cream: ஐஸ்கிரீமில் துண்டிக்கப்பட்ட மனித விரல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி; சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்..!

சமூக ஆர்வலர் தீபிகா நாராயண் பரத்வாஜ் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று யூடியூபர் மேத்ரே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் அளித்த புகாரில், 'யூடியூபர் ஷிகா மேத்ரே, குவாரி பேகம் என்ற கேமிங் சேனலை நடத்தி வருவதாகவும், அங்கு சிறுவர்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு எதிரான பாலியல் செயல்களை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்' என தனது X-தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.