மே 28, வில்லிவாக்கம் (Chennai News): தேசிய குற்ற ஆவணங்களின் பதிவுப்படி, ஒவ்வொரு நாளும் 80க்கும் அதிகமான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். தனிமனித ஒழுக்கமின்மை காரணமாக நடக்கும் இத்துயரங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்படவேண்டும் எனில், பலாத்காரத்திற்கு எதிரான குற்றங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தனிமனித உயிருக்கும் உரிய மதிப்பு அளிக்கப்படவேண்டும் எனில், அந்த உயிர்களுக்கான மதிப்பை வழங்காத கேடுகெட்ட ஜென்மங்களுக்கு இறக்கம் பார்த்தால் கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் வெளிப்பாடாக இருக்கிறது.
11 வயது சிறுமி: சென்னையில் உள்ள வில்லிவாக்கம் (Villivakkam 11 Aged Girl Rape) பகுதியில் வசித்து வரும் பெற்றோருக்கு 11 வயதுடைய மகள் இருக்கிறார். சிறுமி அங்குள்ள பள்ளியில் 5ம் வகுப்பு பயின்றுவிட்டு, ஆறாம் வகுப்புக்கு செல்லவுள்ளார். கூலித்தொழிலாளியான சிறுமியின் பெற்றோர் மதுபோதைக்கு அடிமையான நபர்கள் ஆவார்கள். மொத்தமாக இவர்களுக்கு 3 குழந்தைகள் என்ற நிலையில், மூத்த மகள் 11 வயது சிறுமி ஆவார். Temple Undiyal Theft: கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலை சாக்குப்பையில் தூக்கிச்சென்ற இளைஞர்; சாமி கும்பிட்டுவிட்டு அதிர்ச்சி செயல்.!
அந்த 3 பேர்: இந்நிலையில், சம்பவத்தன்று திருவேற்காடு பகுதியில் உள்ள தனது சித்தியின் வீட்டிற்கு சென்ற சிறுமி கடும் வயிற்று வலி மற்றும் பிறப்புறுப்பு வலியால் அவதிப்படுவதாக கூறி இருக்கிறார். சிறுமியின் சித்தி சோதித்தபோது, அவர் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதை உறுதி செய்துள்ளார். இதனால் யார் உன்னிடம் தவறாக நடந்தார்கள்? என வினவியபோது பெரியப்பா மகன் உட்பட 3 பேரின் விபரத்தை தெரிவித்து அதிர்ச்சி தந்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை: இதனைக்கேட்டு அதிர்ந்துபோன சிறுமியின் சித்தி, அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதி செய்தார். மேலும், சிறுமியின் பாட்டி உதவியுடன், வில்லிவாக்கம் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்ற காவல் துறையினர் நடத்திய விசாரணையில் நெஞ்சை ரணமாக்கும் பல அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.
16 வயது சிறுவர்களின் அதிர்ச்சி செயல்: சிறுமியின் பெரியப்பா மகனான 16 வயது சிறுவன், பெற்றோர் இருந்தும் ஆதரவின்றி தவித்த 11 வயது சிறுமிக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து சீரழித்து இருக்கிறார். இதனை பார்த்த எதிர்வீட்டில் வசித்து வரும் வேறொரு 16 வயது சிறுவனும் தனது கொடூரத்தை அரங்கேற்றி இருக்கிறான். இந்த விபரத்தை அறிந்த அப்பகுதியில் டெய்லர் கடை நடத்தி வரும் குமார் என்பவனும் சிறுமியை காப்பாற்றாமல் கொடூரத்தை அரங்கேற்றி இருக்கிறான். BSP Candidate Injured: எடைக்கு எடை நாணயம் வழங்கும் நிகழ்வில் சோகம்; இளம் பெண் வேட்பாளரின் தலையில் விழுந்த தராசு.!
போதை பெற்றோர்களின் அலட்சியம்: இவர்கள் மூவர் மட்டுமல்லாது, சிறுமியுடைய பெரியப்பா மகன் நண்பர்கள் சிலரும் அத்துமீறி இருக்கின்றனர். கடந்த 6 மாதமாக இத்துயரத்தை அனுபவித்து வந்த சிறுமி, தனது பெற்றோரிடம் விபரத்தை தெரிவித்துள்ளார். மதுபோதைக்கு அடிமையான அந்த பெற்றோர்களோ, அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இதனால் சிறுமியும் என்ன செய்வது என தெரியாமல் திணறி இருக்கிறார்.
3 பேர் போக்ஸோவில் கைது: நேற்றும் கயவர்களின் செயல் தொடர்ந்த நிலையில், அதனால் வலி பொறுக்க இயலாமல் சிறுமி சித்தி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நடந்ததை கூறிய பின்னரே விபரம் காவல்நிலையம் வரை சென்றுள்ளது. விசாரணையில் உண்மையை அறிந்த காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சிறுமியின் பெரியப்பா மகன், அவரின் எதிர் வீட்டு சிறுவன், டெய்லர் குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஞ்சிய குற்றவாளிகள் குறித்து விசாரணை: இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்கிறார். அவரிடம் வேறு யாரெல்லாம் தவறாக நடந்துகொண்டுள்ளனர்? என விசாரணை நடக்கிறது. விரைவில் பிற குற்றவாளிகளும் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.