Tirunelveli: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; ஒருவர் கைது.!
போனில் தொடர்புகொண்ட மர்ம நபர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது வெடிக்கும் எனவும் மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
ஜனவரி 09, திருநெல்வேலி (Tirunelveli News): தமிழ்நாட்டில் வெடிகுண்டு மிரட்டல் என்பது பரவலாக தொடர்ந்து வருகிறது. அரசு அலுவலகம், பள்ளிகள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில், வெடிகுண்டு வெடிக்கும் என மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. காவல்துறையினர் சோதனை நடத்தி, பின் அவை புரளி என தெரியவந்ததும், மிரட்டல் விடுத்த நபரை தேடி கைது செய்கின்றனர். சென்னை: 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்; அரசியல்கட்சி நிர்வாகி, பெண் காவல் ஆய்வாளரின் அராஜகம்.. பரபரப்பு தகவல் அம்பலம்.!
வெடிகுண்டு மிரட்டல்:
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் (Tirunelveli Collector Office) அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் (Bomb Threat) விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியர் (Nellai Collector Office) அலுவலகத்திற்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
45 வயது நபர் கைது:
வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது வரை எந்த வெடிபொருளும் கைப்பற்றப்படாத நிலையில், சோதனை தீவிரமடைந்துள்ளது. மிரட்டல் விடுத்த நபருக்கும் அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். இதனிடையே, 45 வயதுடைய நபர் ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் விசாரணை நடக்கிறது.
(The above story first appeared on LatestLY on Jan 09, 2025 07:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

