Chennai Rains: இடி-மின்னலுடன் தலைநகர் சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை; அடுத்த அலர்ட்.!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் குளுமையான சூழலை ரசித்தாலும், வெள்ள பயத்தில் இருக்கின்றனர்.
அக்டோபர் 15, கோயம்பேடு (Chennai News): தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருக்கும் காரணத்தாலும், அதன் நகர்வுகள் புதுச்சேரி - சென்னை மற்றும் ஆந்திர கடலோரம் நோக்கி இருப்பதாலும் தமிழ்நாட்டில் மழைக்கு (Tamilnadu Rains) சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இன்று மழைக்கு (Today Weather) சாதகமான மாவட்டங்கள்:
இன்று திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், இராணிப்பேட்டை, சென்னை (Chennai Rains), செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. School College Holiday: இன்று கனமழையால் எந்த மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை?.. விபரம் உள்ளே.!
சென்னை & புறநகர் பகுதிகளில் நல்ல மழை:
அதன்படி, நேற்று இரவு முதலாக சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கீழ்பாக்கம், சைதாப்பேட்டை, கோயம்பேடு, ஆதம்பாக்கம், தி.நகர், வேளச்சேரி, கிண்டி, சோழிங்கநல்லூர் என பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் பயங்கர இடி-மின்னலுடன் மழை பெய்தது. புறநகர் பகுதியான கும்மிடிப்பூண்டியில் அதிகபட்சமாக 10 செமீ மழை பெய்துள்ளது. பொன்னேரியில் 9 செமீ மழையும், ஊத்துக்கோட்டையில் 5 செமீ மழையும் பெய்துள்ளது.
சென்னை மழை இயல்பாக இருக்கும்:
இன்று காலை 10 மணிவரையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு இன்று முழுவதும் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது. தனியார் வானிலை ஆய்வு மைய அதிகாரியான ராஜா ரங்கசாமி, "சாதாரணமான சூழலில் பருவமழை தொடங்கியுள்ளது. சென்னை மழை இயல்பாக இருக்கும். கவலை வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.
காற்றின் திசை, மழை குறித்த நகர்வுகளை துல்லியமாக Windy.com-ல் பெறுங்கள்..
நேற்று மழை பெய்தபோது எடுக்கப்பட்ட காணொளி:
Only God can save - #ChennaiRains pic.twitter.com/QxMULF39ad
— Let's X OTT GLOBAL (@LetsXOtt) October 15, 2024
சோழிங்கநல்லூர் பகுதியில் இடி-மின்னலுடன் நல்ல மழை:
#sholinganallur #ChennaiRains pic.twitter.com/9OpkthuSPq
— Pattabi Raman (@pattabiraman_kl) October 14, 2024
சென்னையில் மழை இயல்பாக இருக்கும் என தனியார் வானிலை மையம் கணிப்பு:
7 am update: On and Off showers possible over few places in #Chennai city pic.twitter.com/HHmgrJABG6
— Chennai Weather-Raja Ramasamy (@chennaiweather) October 15, 2024
(The above story first appeared on LatestLY on Oct 15, 2024 08:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

