ATM Machine Issue: ஏ.டி.எம். எந்திர கோளாறு; 100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வெளியீடு..! வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!

புதுக்கோட்டையில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து கூடுதலாக பணம் வெளிவந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ATM Machine Issue: ஏ.டி.எம். எந்திர கோளாறு; 100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வெளியீடு..! வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!
ATM file pic (Photo Credit: Pixabay)

மே 23, புதுக்கோட்டை (Pudukottai News): புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர், கிள்ளுக்கோட்டை சாலையில் தனியாருக்கு வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. இதில், நேற்று மாலை ஏ.டி.எம். எந்திரத்தில் (ATM Machine) பணம் எடுத்தவர்களுக்கு 100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் வந்துள்ளது. இதனால், அவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். Temple Priest Death: ஆட்டு ரத்தத்தை குடித்த கோவில் பூசாரி உயிரிழப்பு; மேலும் சிலருக்கு வாந்தி, மயக்கம்..!

இதனையடுத்து, ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து அதிக பணம் வருவதாக அப்பகுதி முழுவதும் தகவல் பரவியது. இதுபற்றி தகவலறிந்து வந்த ஏ.டி.எம். எந்திர ஊழியர்கள், ஏ.டி.எம். எந்திரத்தை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது, அதில் ரூ.100 நோட்டுகள் வைக்கும் இடத்தில் ரூ.500 நோட்டுகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன்காரணமாக தான் இவ்வாறு நடந்துள்ளது என்பதனை கண்டறிந்து அதனை சரிசெய்தனர்.

இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் இதுவரை, சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் வரை பணம் எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இதில், ஒரு சிலர் மட்டும் பணத்தை திருப்பி அளித்ததில், ரூ.60 ஆயிரம் பெறப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக சென்ற பணத்தை, வங்கி கணக்கை ஆராய்ந்து பணத்தை திரும்ப பெற வங்கி நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

(The above story first appeared on LatestLY on May 23, 2024 12:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).