Death File Pic (Photo Credit: Pixabay)

மே 23, கோபிமொடச்சூர் (Erode News): ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி (வயது 56) என்பவர், கொளப்பலூர் செட்டியாம்பாளையத்தில் உள்ள அண்ணமார் கோவிலில் பூசாரியாக (Temple Priest) இருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தற்போது, கோவில் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருவதால், கோவில் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். Daughter Sexual Harassment Her Father: 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தந்தையின் செயலால் சிறுமியின் தாய் அதிர்ச்சி..!

இந்நிலையில், நேற்றைய தினம் அவர் கோவில் பகுதியில் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர், இதுதொடர்பாக சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கோவில் திருவிழாவில் நடைபெற்ற பரண் கிடாய் பூசையில், ஆட்டை வெட்டி அதன் ரத்தத்தை வாழைப்பழத்துடன் சேர்த்து, கோவில் பூசாரி உட்பட 5 பேருக்கும் அதிகமானோர் சாப்பிட்டுள்ளனர். இதனை உட்கொண்ட சற்று நேரத்தில் சாப்பிட்ட அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.