Facebook Scam: பேஸ்புக் பயனர்களே உஷார்.. பேஸ்புக் விளம்பரம் மூலம் 55 லட்சம் மோசடி..!

பேஸ்புக் விளம்பரம் மூலம் வங்கி ஊழியரிடம் 55 லட்சம் ரூபாயை நூதன முறையில் மோசடி செய்த இளைஞரை ஆவடி சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர்.

Facebook Scam (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 13, சென்னை (Chennai): சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவர் பேஸ்புக்கில் (Facebook) விளம்பரம் ஒன்றை பார்த்து, அவர்களை தொடர்பு கொண்டுள்ளார். அவர்களோ பிட் காயின் (bitcoin) டிரேடிங் பற்றி பேசி, பணம் செலுத்தினால், உடனுக்குடன் லாப தொகை வங்கிக்கு செலுத்தப்படும் எனக்கூறியுள்ளனர். இதனை நம்பி, அவர்களுக்கு USER NAME மற்றும் PASSWORD கொடுத்துள்ளார். மேலும் 55 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயையும் கொடுத்துள்ளார். Formula 4 Street Car Racing: ஃபார்முலா 4 கார் பந்தயம்.. எப்போது நடக்க உள்ளது?. வெளியான அதிரடி அறிவிப்பு..!

ஆனால், லாப தொகை எதுவும் தராத‌தால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பால முருகன், ஆவடி சைபர் கிரைமில் புகார் அளித்தார். தொடர்ந்து, வங்கி கணக்குகளை ஆய்வு செய்த காவல்துறையினர், ஊரப்பாக்கத்தை சேர்ந்த டோமினிக் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் சமூக வலைத்தளங்களில் வேலைவாய்ப்பு உள்ளதாக கூறி பணம் பறித்து, டெல்லியில் இருக்கும் கும்பலுக்கு கைமாற்றி விடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement