Car Racing (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 13, சென்னை (Chennai): புயல் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதன் விளைவாக சென்னையில் நடைபெற இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் (Formula 4) கால வரையரையின்றி எந்தத் தேதியும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை கோரிய வழக்குகள் போடப்பட்டன. அவை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, கார் பந்தயம் குறித்த அரசின் நிலைப்பாடு குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். UPI Now In Sri Lanka and Mauritius: இப்போது இலங்கை மற்றும் மொரிஷியசில் யுபிஐ.. இந்திய சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி..!

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், வெள்ளம் காரணமாக கார் பந்தயம் (Car Racing) தள்ளி வைக்கப்பட்டதாகவும், ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பந்தயம் நடத்த ராணுவம் மற்றும் கடற்படையிடம் தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளது, ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து பந்தய வழித்தடம் 100 மீட்டர் தூரத்தில் உள்ளதால், அந்த இடத்தை கடக்கும்போது ஒலி கட்டுப்பாடு கடைபிடிக்கப்படும். இதற்கு மருத்துவமனையும் அனுமதி அளித்துள்ளது என்றும் கூறியுள்ளார். இதையடுத்து வழக்குகளின் மீதான தீர்ப்பை வரும் பிப்ரவரி 16ம் தேதி பிறப்பிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.