ஜனவரி 13, குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தர் (Kushboo about Hindutva and Swami Vivekananda) நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக
தேசிய குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ பேசுகையில், "பல தருணங்களில் உங்களுக்கு முடிவெடுக்கும் நிலை வரும். அன்று குழம்பியும் போவீர்கள். அவ்வாறான குழப்பம் ஏற்படுகையில் மனம் மற்றும் புத்தி ஆகியவற்றில் எது சொல்வதை கேட்க வேண்டும் என விவேகானந்தர் கூறியுள்ளார்.
காதல் மனதில் இருந்து யோசனை செய்யப்படும். காதலுக்கு மனது சரியான முடிவை எடுக்கும். நமது புத்தியை முன்னேற்றத்திற்கு உபயோகம் செய்ய வேண்டும். புத்தியால் நாளைய சாதனைகளை திட்டமிடுங்கள். ஆண், பெண் வித்தியாசம் பார்க்காமல் இருந்தாலும், பெண்களிடம் சொல்லும் விஷயத்தை ஆண்களிடம் சொல்வது இல்லை. Nashik Accident: சொகுசு பேருந்து – கனரக லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 7 பெண்கள் உட்பட 10 பேர் பரிதாப பலி.!
இந்துத்துவம் குறித்து தவறான சாயம் பூசப்படுகிறது. அனைவரையும் சமமாய், ஆண்-பெண் சரிசமம் என கூறுவது இந்துத்துவா. பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்களில் விவேகானந்தர் உள்ளார். உலகமே கொரோனாவால் தத்தளித்தபோது தடுப்பூசியை உலக நாடுகளுக்கு வழங்கினார்.
இந்துத்துவ கொள்கைகளை எதிர்க்கட்சிகள் தவறாக புரிந்துகொண்டுள்ளன. தேர்தல் சமயத்தில் எதிர்கட்சிக்கு பூணூல், கோவில் நினைவு வரும். அப்போதுதான் சாதியை காண்பிப்பார்கள். மதத்திற்கு எதிராக பேசுவார்கள். கவர்னர் விவகாரத்தில் அனைத்துமே தவறாக உள்ளது. உங்களின் அரசாங்கத்திற்கு மேல் ஆளுநர் இருக்கிறார்.
அரசின் செயல்பாடுகளை மேற்பார்வைசெய்யவும், தவறுகளை தட்டிக்கேட்கவும் அவர் உள்ளார். ஆளுநர் சபையை விட்டு வெளியேறும் போது அமைச்சர் பொன்முடி சைகை காண்பித்துள்ளார். இது தவறான செயல். தமிழ்நாடு, தமிழகம் இரண்டிலும் வேறுபாடுகள் இல்லை என காங்கிரஸ் கே.எஸ். அழகிரி கூறியபோது ஒன்றும் பேசாதவர்கள், ஆளுநருக்கு எதிராக கோசம்போட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார்கள்" என்று பேசினார்.