Tomorrow weather (Photo Credit: LatestLY)

நவம்பர் 16, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழகத்‌இல்‌ வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. தமிழகத்தில்‌ பெரும்பாலான இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்‌தில்‌ திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு (12 செமீ), ஊத்து (11 செமீ), காக்காச்சி (10 செமீ), மாஞ்சோலை (9 செமீ) ஆகிய பகுதிகளில் அதிகபட்ச மழை பெய்துள்ளது. கடலூர், நாகை, மயிலை, திருவாரூர், தூத்துக்குடி, ஈரோடு, நீலகிரி, நெல்லை, சென்னை, தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, குமரி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சிவகங்கை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.

இன்றைய வானிலை (Today Weather):

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில், குமரிக்கடல்‌ மற்றும்‌ தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளின்‌ மேல்‌ ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 16-11-2024 இன்று தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. விழுப்புரம்‌, கடலூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, அரியலூர்‌, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களிலும்‌ புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. Minor Girl Raped: 13 வயது சிறுமி கர்ப்பம்., 62 வயது பள்ளிப் பேருந்து உதவியாளர் அதிர்ச்சி செயல்.. பெற்றோர்களே கவனம்.! 

நாளைய வானிலை (Tomorrow Weather):

17-11-2024 அன்று தமிழகத்‌தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌ மற்றும்‌ திருவாரூர்‌ மாவட்டங்களிலும்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிளிலும்‌ ஓரிரு இடங்களிலும்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 18-11-2024 அன்று தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. 19-11-2024 முதல்‌ 22-11-2024 வரை தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னை வானிலை (Today Weather in Chennai):

சென்னை மற்றும்‌ புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்‌சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பறிலை 25 டிகிரி செல்‌சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

16-11-2024 இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 இ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. கேரள மற்றும்‌ தெற்கு கர்நாடக கடலோரப்பதிஇகள்‌ மற்றும்‌ லட்சத்‌தவு பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்‌திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்பதால், மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.வங்கக்கடல்‌ பகுதிகளில் எச்சரிக்கை ஏதுமில்லை.