TN Weather Update: அடுத்த 7 நாட்களுக்கு வானிலை நிலவரம் என்ன?.. நாளைய வானிலை அறிவிப்பு இதோ.!
மேற்குத்திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 7 நாட்களில் தமிழ்நாட்டில் பரவலான இடங்களில் மட்டுமே மிதமான மழைக்ன சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 24, சென்னை (Chennai News): சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள நாளைய வானிலை (Tomorrow Weather) செய்திக்குறிப்பில், "கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்ச வெப்பநிலையாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 36.5 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 18.6 டிகிரி செல்சியசும் ஈரோட்டில் பதிவாகி உள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பில், மேற்குத்திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 24 மற்றும் 25ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26 முதல் 29 ஆம் தேதி வரையில் தமிழகத்தில் ஒரு சில இடத்திலும், புதுச்சேரி - காரைக்கால் பகுதியில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 6-Year-Old Girl Rape: 6 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை; புரட்சி பாரதம் கட்சிப்பிரமுகர் போக்ஸோவில் கைது.!
தலைநகர் நிலவரம் & மீனவர்களுக்கு எச்சரிக்கை:
30 ஆம் தேதியை பொறுத்தமட்டில் தமிழகத்தில் ஒரு சில இடத்திலும், புதுவை-காரைக்கால் பகுதியிலும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தமட்டில் 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசும் பதிவாகும். மீனவர்களுக்கான எச்சரிக்கையாக தமிழக கடலோரப் பகுதிகளில் 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதி, அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும். அதேபோல, வடக்கு ஆந்திர கடலோரப்பகுதி, தென்மேற்கு, மத்திய வடக்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.
அரபிக்கடலை பொறுத்தமட்டில் 24 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மத்திய மேற்கு அரபிக்கடல், வடக்கு கர்நாடகா கடலோர பகுதி, கேரளா கடலோர பகுதி, மத்திய கிழக்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய இடங்களில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால், இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
(The above story first appeared on LatestLY on Aug 24, 2024 02:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

