Drunken Man Atrocity Ends: காவல் அதிகாரிகளை நாக்கூசும் வார்த்தையால் வசைபாடிய அரசியல்கட்சி பிரமுகர்.. இறுதியில் நடந்த மாவுக்கட்டு சம்பவம்.!
போதை மனிதனை மாற்றான் ஆக்கும் என்பதை மணிக்கு ஒருமுறை என ஒவ்வொரு குடிகாரர்களுக்கு நிரூபணம் செய்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது நடந்துள்ள சம்பவத்தின் இறுதியில் ஆசாமிக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.
மே 20, கூவத்தூர் (Chengalpattu News): செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேப்பஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவர் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மதுபோதையில் வாகனத்தை இயக்கி வந்துள்ளார்.
இவர் உள்ளூரில் பிரபலமான கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்ததாகவும் கூறப்படும் நிலையில், இறுதியாக இருதரப்பு பிரச்சனை நடந்த கட்சியில் ஐக்கியமானதாகவும் சொல்லப்படுகிறது.
சம்பவத்தன்று போதையில் வந்த நாகராஜனை கூவத்தூர் காவல் துறையினர் மடக்கியுள்ளனர். அவர் மதுபோதையில் வந்ததால் அரசியல்வாதி பாணியில் பேசத்தொடங்க, அதிகாரிகள் அவரை காவல் நிலையம் அழைத்து வந்தனர். Gold Smuggling: 90 பாணியில் தங்கத்தை கடத்தி வந்த பயணி.. அசால்ட்டாக பிடித்த மும்பை சுங்கத்துறை..!

அங்கு காவல்துறை அதிகாரிகளை கடுமையான சொற்களில் வசைபாடிய நாகராஜன், பெண் அதிகாரி அருகே இருந்தபோதிலும் நாவடக்கம் இன்றி மேலாடையை கழற்றிவிட்டு ரகளை செய்துகொண்டு இருந்தார்.
அவர் செய்யும் சேட்டைகள் மற்றும் நாவில் இருந்து வரும் வார்த்தைகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாதவாறே இருந்தனர். இந்த நிலையில், அவர் காலில் பலத்த மாவுக்கட்டு போடப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் அறியப்படவில்லை.
(The above story first appeared on LatestLY on May 20, 2023 11:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

