Airport Employee Murder: ஆண் நண்பர்களுடன் சேர்ந்து வாழ நினைத்த கணவனை போட்டுத்தள்ளிய மனைவி; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
அன்பு மனைவி தவறான சவகாசத்தில் பிரிந்து சென்றுவிட, அவரை திருத்தி சேர்ந்து வாழ நினைத்த கணவர் கொலை செய்யப்பட்டார். பெண்ணின் அழகில் மயங்கி தேடப்படும் குற்றவாளிகளாக 2 பேர் மாறியுள்ளனர்.
ஏப்ரல் 10,நங்கநல்லூர் (Chennai News): சென்னையில் (Chennai) உள்ள நங்கநல்லுர் பகுதியில் வசித்து வருபவர் ஜெயந்தன் (வயது 29). இவர் சென்னை விமான நிலையத்தில் இருக்கும் தாய்லாந்து விமான நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவரின் சொந்த ஊர் விழுப்புரம். கடந்த மார்ச் 19ம் தேதி விழுப்புரம் செல்வதாக சகோதரியிடம் கூறி சென்றவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இந்த விஷயம் தொடர்பாக ஜெயந்தனின் சகோதரி பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், விமான நிறுவன ஊழியராக பணியாற்றி வந்த பாக்யலட்சுமியை பார்க்க சென்றவர் கொலை செய்யப்பட்ட தகவல் தெரியவந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி, செம்மாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. கடந்த 2020ல் பாக்யலட்சுமியை திருமணம் செய்த ஜெயந்தன், ஓராண்டுக்கு பின்னர் பிரிந்துள்ளனர். Mother Killed Children: 2 பச்சிளம் பிஞ்சுகளை கொன்று, கிணற்றில் குதித்து தானும் தற்கொலை செய்த தாய்.. குடும்ப பிரச்சனையால் விபரீதம்.!
சம்பவத்தன்று குடும்பம் நடத்த அழைப்பு விடுக்க சென்ற ஜெயந்தன் கொலை செய்யப்பட்டுள்ளார். பின்னர் உடலை துண்டு துண்டாக்கி வெட்டி எரித்து கொலை செய்துள்ளனர். பாக்யலட்சுமிக்கு உடந்தையாக அவரின் நண்பர் சங்கர் என்பவர் இருந்துள்ளார். கொலை விவகாரத்தை அறிந்த காவல் துறையினர் பாக்யலட்சுமியை கைது செய்தனர்.
பாக்கியலட்சுமியின் வாக்குமூலப்படி ஜெயந்தனின் உடல் பாகங்கள் மீட்டெடுக்கப்பட்டன. இவை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைங்கப்பட்டது. விசாரணையில், பாக்யலட்சுமியின் அழகில் மயங்கி சங்கர், வேல்முருகன் ஆகியோர் கொலைக்கு உதவி செய்துள்ளார். தலைமறைவான சங்கர், வேல்முருகன் ஆகியோரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Apr 10, 2023 04:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

