Mother Killed Children: 2 பச்சிளம் பிஞ்சுகளை கொன்று, கிணற்றில் குதித்து தானும் தற்கொலை செய்த தாய்.. குடும்ப பிரச்சனையால் விபரீதம்.!
கணவன் - மனைவியிடையே நடந்த தகறாரின் காரணமாக மனமுடைந்துபோன இளம்பெண், தனது 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு, தானும் அதே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.
ஏப்ரல் 10, திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சோமாசிபாடி (Somasipadi, Tiruvannamalai), வற்றபுத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் சின்னராசு. இவர் ஊராட்சி மன்ற செயலாளராக பணியாற்றி வருகிறார். சின்னராசுவின் மனைவி சூர்யா (வயது 32). இவர் சோமாசிபாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
தம்பதிகளுக்கு இலட்ச குமார் (வயது 4), உதயகுமார் (வயது 1) என 2 குழந்தைகள் இருக்கின்றனர். சின்னராசு - சூர்யா இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்த நிலையில், அவ்வப்போது கடுமையான வாக்குவாதமும் செய்து வந்துள்ளான். குடும்பத்தினர் அதனை சரிக்கட்டி தம்பதிகளின் வாழ்க்கையை நடத்த உதவி இருக்கின்றனர். College Girl Suicide: காதலித்து கர்ப்பிணியாக்கி கைவிட்ட காதலன்; மாணவி விபரீத முடிவு.. காதலன் உட்பட 3 பேர் கைது.!
இதற்கிடையில், நேற்று சின்னராசு திண்டிவனத்தில் நடைபெற்ற திருமண விழாவுக்கு சென்றுவிட்டு, நள்ளிரவு 1 மணியளவில் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கதவை திறந்து பார்க்கையில் குழந்தைகள் மற்றும் மனனவி இல்லை. இதனால் அதிர்ந்துபோனவர் தாயாரிடம் பிள்ளைகளை கேட்டுள்ளார். அவரும் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
பதறியபடி குழந்தைகள் மற்றும் மனைவியை தேடிய நிலையில், சூர்யாவின் செல்போனுக்கு அழைப்பு கொண்டபோது ஏரிக்கரையில் இருந்து சத்தம் வந்துள்ளது. செல்போனின் சத்தத்தை கேட்டபடி சென்றபோது, செல்போன் ஏரிக்கரையில் உள்ள கிணற்றுக்கு அருகே தென்பட்டுள்ளது. ஒருவேளை மனைவி தற்கொலை செய்துகொண்டாரோ என்ற அச்சத்தில் தீயணைப்பு படையினருக்கு சின்னராசு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கிணற்றுக்குள் தேடியபோது சூர்யா மற்றும் அவரின் 2 குழந்தைகளின் சடலம் அடுத்தடுத்து தென்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Apr 10, 2023 02:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

