Robbery Ends Arrest: திரைப்பட பாணியில் திருடனின் கையைக்கடித்து தப்பிய பெண்மணி; சில்வண்டுகளை 4 கி.மீ துரத்திப்படித்த அம்பத்தூர் காவல்துறை.!

தொடர் திருட்டுசெயலில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள், பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்ட கதையாக பெண்ணிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கைதான சம்பவம் நடந்துள்ளது.

Robbery Ends Arrest: திரைப்பட பாணியில் திருடனின் கையைக்கடித்து தப்பிய பெண்மணி; சில்வண்டுகளை 4 கி.மீ துரத்திப்படித்த அம்பத்தூர் காவல்துறை.!
Apartment | Women Sad (Photo Credit: TNHB.Gov.in | Pixabay)

நவம்பர் 18, சென்னை (Chennai Crime News): சென்னையில் உள்ள அம்பத்தூர், அத்திப்பட்டு பகுதியில் 19 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. சம்பவத்தன்று அக்குடியிருப்பை சேர்ந்த பெண்மணி கீழ்தளத்தில் இருந்த நிலையில், அங்கு 2 இளைஞர்கள் வந்துள்ளனர்.

பெண்மணியை பின்பகுதியில் இருந்து திடீரென நெருங்கியவர்கள், பெண்ணின் வாயில் துணியை திணிக்க முயற்சித்துள்ளனர். பதறிப்போன பெண்மணி அவர்களிடம் இருந்து தப்பிக்க, இளைஞர் ஒருவரின் கையை கடித்து உதவிக்காக அலறியுள்ளார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்துவிடவே, இளைஞர்கள் பெண்ணை தாக்கி அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதனையடுத்து, உடனடியாக சம்பவம் குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த காவல் துறையினர் அடுக்குமாடி குடியிருப்பு நோக்கி வாகனத்தில் வந்துகொண்டு இருந்தனர். அச்சமயம் எதிர்திசையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். Dhanush Son Fined Offence: தலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் இயக்கியதாக, நடிகர் தனுஷின் மகனுக்கு சென்னை காவல்துறை அபராதம்..! 

அச்சமயம் அவர்களை நிறுத்த முயற்சிக்க, இளைஞர்கள் தப்பி சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர், அவர்கள் இருவரையும் விரட்டிச்சென்றனர். சுமார் 4 கி.மீ தூரம் இருசக்கர வாகனத்தில் சென்ற குற்றவாளிகள் துரத்தி பிடிக்கப்பட்டனர்.

அவர்களை சோதனையிட்டபோது 4 சவரன் தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள், ரூ.27 ஆயிரம் ரொக்கம், 5 செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டன. விசாரணையில் இருவரும் ஜெ.ஜெ நகர் பகுதியை சேர்ந்த சுதமணி, கலையரசன் என்பது தெரியவந்தது.

இருவரின் மீது ஜெ.ஜெ நகர், அண்ணாநகர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. சம்பவத்தன்று அம்பத்தூர் சுற்றுவட்டாரத்தில் திருட்டுச்செயலை அரங்கேற்றியவர்கள், அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணிடம் கைவரிசை காண்பித்த நினைத்து சிக்கிக்கொண்டுள்ளது அம்பலமானது.

இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஒரு இளைஞருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின், நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.

(The above story first appeared on LatestLY on Nov 18, 2023 08:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).