Actor Dhanush | Chennai Police (Photo Credit: Wikipedia)

நவம்பர் 18, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் முன்னாள் மருமகனுமானவர் தனுஷ் (Dhanush). கடந்த ஆண்டு தனுஷ் மற்றும் அவரின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரஸ்பர விவாகரத்து அறிவித்தனர்.

இது திரையுலக வட்டாரத்தை பெறும் அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும், நடிகர் தனுஷ் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதை தொடர்ந்து வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தனது தந்தையை சிறப்பு தோற்றத்தில் நடிக்கவைத்து, லால் ஸலாம் படத்தை வெளியிடும் பணியில் மும்மரமாக இருக்கிறார். Theni Shocker: அனுமதினமும் மனைவிக்கு போதையில் உறவுக்கு வற்புறுத்தி தொந்தரவு.. அந்த உறுப்பிலேயே மிதித்து, கழுத்தை நெரித்து கணவன் கொலை.! 

இந்த தம்பதிகளுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில், மூத்த மகனுக்கு 17 வயது ஆகும் நிலையில், அவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்தை இயக்கி இருக்கிறார்.

தலைக்கவசமும் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கிய நிலையில், நேற்று இரவு சென்னை காவல் துறையினர் தனுஷின் வீட்டிற்கு சென்று ரூ.1000 அபராதம் விதித்து வசூலித்து வந்தனர்.

தமிழ் திரையுலகில் நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகத்தை கொண்ட தனுஷ், கடந்த 2004ல் இருந்தே பாடல்கள் பாடி இருக்கிறார். அவரின் பாடல்கள் ஹிட் அடித்தும் இருக்கின்றன. திரையில் பல விமர்சனங்களை சந்தித்த தனுஷின் திரையுலக வாழ்க்கை 2002ல் துள்ளுவதோ இளமை திரைப்படம் முதல் தொடங்கி, இன்று வரை வெற்றிகரமாக நகர்கிறது.