காதல் ஜோடி கெளதம் - தீபிகா | முகநூல் மாதிரி படம் (Photo Credit: Facebook / Pixabay)

செப்டம்பர் 16, அம்பத்தூர் (Chennai News): சென்னையில் உள்ள அம்பத்தூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கமல் ஹாசன். இவரின் மகள் தீபிகா (வயது 19). வண்டலூரில் செயல்பட்டு வரும் தனியார் பொறியில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். கடந்த செப். 8 ம் தேதி கல்லூரிக்கு சென்ற தீபிகா வீட்டிற்கு வரவில்லை.

இதனால் அவரை கண்டறிந்து தரக்கூறி, அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்ற காவல் துறையினர், தீபிகாவின் செல்போன் நம்பரை வைத்து சோதித்தபோது, புதுச்சேரி மாநிலம் காரைக்கால், நிரவி பகுதியில் இருப்பது உறுதியானது.

இதனையடுத்து, அம்பத்தூர் காவல் துறையினர், தீபிகாவின் உறவினர்கள் நிரவி புறப்பட்டு சென்றனர். இதற்கிடையில், தீபிகா, முகநூலில் நிரவி பகுதியை சேர்ந்த கெளதம் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இருவரும் தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளார். Iron Deficiency effects: இரும்புச்சத்து குறைபாடுனால இத்தனை பிரச்சனையா?: இனியும் அசால்டா இருந்துடாதீங்க.!

காதல் ஜோடி தங்களுக்கு சட்டப்பாதுகாப்பு கேட்டு நிரவி காவல் நிலையத்திற்கு சென்று முறையிட்டு பலன் இல்லை. இதனால் காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் பாதுகாப்பு வழங்கக்கூறி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை அறிந்த அம்பத்தூர் காவல் துறையினர், நீதிபதிகள் முன்பு ஆஜராகி விபரங்களை தெரிவித்தனர். நீதிமன்ற விசாரணைக்கு பின்னர், 19 வயதாகும் தீபிகாவின் விருப்பப்படி, அவர் காதலன் கௌதமுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த தீபிகா, "தாங்கள் கடந்த 6 ஆண்டுகளாக முகநூலில் சந்தித்து காதலித்து வருவதாகவும், தற்போது திருமணம் செய்துகொண்டதாகவும், எனக்கு 19 வயது ஆவதால் சட்டப்படி நான் விரும்பும் துணையை கரம்பிடிக்க அனுமதி உள்ளது" என்றும் உறவினர்களிடம் தெரிவித்தார்.

இறுதியாக காதலன் எனக்கு கட்டிய தாலியே போதும் என கூறிய தீபிகா, தான் அணிந்திருந்த தங்க நகை, ஸ்மார்ட்போன் ஆகியவற்றை உறவினர்களிடம் கொடுத்து அனுப்பினார். கண்கலங்கியபடி வெதும்பிய உறவினர், "நல்லா இரு மா" என கனத்த இதயத்துடன் கூறிச்சென்றார்.