Red Blood Cells (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 15, சென்னை (Health Tips): உடலுக்கு தேவைப்படும் அத்தியாவசிய சத்துக்களில் இரும்புச்சத்து மிக மிக முக்கியமானதாகும். இன்றைய நவீன காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. ஆண்களை காட்டிலும் பெண்களே அதிக அளவில் இரும்புச்சத்து குறைபாடுடன் இருக்கின்றனர்.

ஹீமோகுளோபின் (Haemoglobin) தான் நம் உடம்பில் இருக்கும் திசுக்களுக்கு ஆக்சிஜனை கொண்டு சேர்க்கிறது. இந்த ஹீமோகுளோபின் அளவு பெண்களுக்கு 12 என்றும் ஆண்களுக்கு 13.5-17.5 இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதற்கு கீழ் எண்ணிக்கை குறையும் போது அனீமியா (Anemia) போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. 4 killed in Anantnag Encounter: அனந்த் நாக் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் பலி :48 மணி நேரமாக தொடரும் துப்பாக்கி சண்டை.!

அதிகமான சோர்வு

இரும்புச்சத்து குறைபாடு உடையவர்கள் பெரும்பாலான நேரங்களில் சோர்வு மற்றும் எரிச்சலுடன் காணப்படுவார்கள். எப்போதும் தூங்கிக் கொண்டு, அன்றாட வேலைகளை ஆற்றலோடு செய்ய முடியாமல் இருப்பார்கள்.

முடி உதிர்வு

இரும்புச்சத்து குறையும் போது கூந்தலில் வேர்க்கால்களில் ரத்த ஓட்டம் குறைந்து, புதிய செல்கள் உருவாவது தடைபடுகிறது. அதனால் முடி உதிர்வு அதிகரிக்கிறது.

எதிர்ப்பு சக்தி குறைவு

உடலில் ஆன்ட்டிபாடிகள் (Antibodies) உருவாகுவதற்கு இரும்புச்சத்து உதவி செய்கிறது. இந்த ஆன்ட்டிபாடிகள் தொற்று நோயை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. அதனால் இரும்புச்சத்து குறையும் போது எளிதில் தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான அபாயமும் இருக்கிறது.

இரும்புச்சத்து தரும் உணவுகள்:

இரும்புச்சத்து குறைபாடு உடையவர்கள் மாதுளம் பழம், கொய்யாப்பழம், அத்திப்பழம் போன்ற பழ வகைகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். உலர் திராட்சை, பேரிச்சம்பழம் போன்றவற்றில் இரும்பு சத்து நிறைய இருக்கிறது. மேலும் கம்பு, சோளம் மற்றும் கேழ்வரகு ஆகிய சிறுதானியங்களையும், மீன், நண்டு, எள், இறைச்சி போன்ற உணவுகளையும் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.