Chennai Shocker: சிகிரெட் பழக்கத்தை வீட்டில் கூறுவதாக மிரட்டி, பள்ளி மாணவனை சீரழிக்க முயற்சி; 35 வயது இளைஞர் கைது.!

Chennai Shocker: சிகிரெட் பழக்கத்தை வீட்டில் கூறுவதாக மிரட்டி, பள்ளி மாணவனை சீரழிக்க முயற்சி; 35 வயது இளைஞர் கைது.!
Sexual Abuse / Rape Representational Image (Photo Credit: Pixabay)

மார்ச் 25, அசோக் நகர் (Chennai News): சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 10வது மண்டலத்தில் வசித்து வருபவர் செல்வமணி (வயது 35). இவர் மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள அசோக் நகர் பகுதியில் வசித்து வரும் பள்ளி மாணவர், தினமும் தனியார் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாணவர் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றபோது, புகைபிடித்துக்கொண்டு இருந்ததாக தெரியவருகிறது. இதனால் சிறுவனை பார்த்த செல்வமணி, அவரை வீட்டில் சொல்லிவிடுவேன் என மிரட்டி இருக்கிறார். தன்னுடன் வாகனத்தில் வருமாறு அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். Holi Celebration: ஹோலி கொண்டாட்டத்தின் பெயரில் விதிமீறல்.. இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் வீடியோ வைரலானதால் காவல்துறை விசாரணை.!

தப்பியோடி வந்த சிறுவன்: பின் சிறுவனை மறைவான இடத்திற்கு அழைத்துசென்றவர், அங்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பதறிப்போன சிறுவன் அங்கிருந்து தப்பிவந்த, பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். இதனைக்கேட்டு பதறிப்போன பெற்றோர், அசோக் நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில் உண்மை அம்பலமாகவே, செல்வமணியை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். செல்வமணியின் மீது கடத்தல் மற்றும் போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

(The above story first appeared on LatestLY on Mar 25, 2024 12:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).