Holy Celebration Insta Reels (Photo Credit: @Mohd_Aqib9 X)

மார்ச் 25, லக்னோ (Lucknow): வடமாநிலங்களில் சகோதரத்துவம், அன்பு ஆகியவற்றை பிரதிபலிக்கும் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை (Holi Festival Celebration) கோலாகலமாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது. பலரும் தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். இன்றளவில் ட்ரெண்டிங்குக்கு ஏற்ற வகையில் இந்திய பாரம்பரிய பண்டிகைகள் அனைத்தும் வித்தியாசமான வகையிலும் சிறப்பிக்கப்படுகிறது. IPL 2024 MI and Gujarat Fans Fight: மைதானத்தை கலவரப்படுத்திய ரசிகர்கள்; மும்பை - குஜராத் அணி ஐபிஎல் ஆட்டத்தில் அடிதடி.! 

எல்லாம் ரீல்ஸ்காக: சமீபத்தில், டெல்லி மெட்ரோ இரயிலில் பயணம் செய்த இரண்டு பெண்கள், தங்களை ஒருவரையொருவர் கட்டியணைத்து தழுவியவர் ஹோலி பண்டிகையை கொண்டாடியது தொடர்பான விடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தனர். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ பதிவிடுவதற்காக பலவற்றையும் துணிந்து செய்கிறது இக்கால இளம் தலைமுறை. இந்நிலையில், மீண்டும் அதுபோன்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. Holi Festival 2024: அன்பு, சகோதரத்துவத்தை வர்ணங்களால் வலுப்படுத்தும் ஹோலி பண்டிகை; வரலாறு, சிறப்புக்கள் என்ன?.. விபரம் இதோ.! 

வழக்கை எதிர்கொள்ளவிருக்கும் பெண்மணி: உத்திரபிரதேசம் மாநிலத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவரும் வீடியோவில், இரண்டு பெண்கள் ஹோலி பண்டிகையை கட்டித்தழுவி கொண்டாடி இருக்கின்றனர். நடுரோட்டில் இருசக்கர வாகனத்தில் செல்வது போன்று பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. யுபி 16சி எக்ஸ் 0866 (UP 16C X 0866) பதிவெண் கொண்ட வாகனத்தில் வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமூக ஆர்வலர் ஒருவர், காவல் அதிகாரிகளின் கவனத்திற்கு அதனை கொண்டு சேர்த்துள்ளார். இதனால் ரீல்ஸ் வீடியோ பதிவிட்ட நபர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

தலைக்கவசம் இன்றி மூவராக பயணித்து பதிவேற்றிய வீடியோ வைரல்:

 

View this post on Instagram

 

A post shared by @preeti.morya.7145