Couple Fight Suicide: மனைவியை கொலை செய்ய முயற்சித்து, பயத்தில் தற்கொலை செய்துகொண்ட கணவன்.. நள்ளிரவில் நடந்த பயங்கரம்.!

நள்ளிரவு நேரத்தில் சண்டையிட்ட தம்பதியில் கணவனின் ஆத்திரத்தால் மனைவியை கொலை செய்ய முயற்சி நடந்து, அவர் இறந்துவிடுவாரோ என்ற பயத்தில் கணவர் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

Couple Fight Suicide: மனைவியை கொலை செய்ய முயற்சித்து, பயத்தில் தற்கொலை செய்துகொண்ட கணவன்.. நள்ளிரவில் நடந்த பயங்கரம்.!
Avadi Pattabhiram Husband Wife Case (Visual from Spot)

மார்ச் 06, பட்டாபிராம் (Chennai News): சென்னையில் உள்ள ஆவடி (Avadi), பட்டாபிராம் மசூதி தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 46). இவர் மசூதி தெருவில் உணவகம் (Hotel Owner) வைத்து நடத்தி வருகிறார். மணிகண்டனின் மனைவி கௌதமி (வயது 36). தம்பதிகளுக்கு சீனிவாசன் (வயது 16), ஆகாஷ் (வயது 14), பவித்ரா (வயது 12) ஆகிய 3 பிள்ளைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் பிள்ளைகள் உறங்கிய பின்னர், தம்பதிகளிடையே (Couple Family Fight) தகராறு நடந்துள்ளது. இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற மணிகண்டன், வீட்டின் சமயலறையில் இருந்த காய்கறி கத்தியால் கௌதமியின் கழுத்தை அறுத்துள்ளார். Summer Season EB Bill Tips: கோடைகாலத்தில் மின்கட்டணம் பெரிய தலைவலியாக மாறும் என நினைக்கிறீர்களா?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

கழுத்தில் இருந்து இரத்தம் வெளியேறி துள்ளத்துடிக்க கதறிய கௌதமியின் அலறல் சத்தம் கேட்டு சீனிவாசன் வந்துள்ளார். அவர் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்து, அவர்கள் மூலமாக தாயாரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தார்.

மருத்துவமனையில் கௌதமுக்கு 16 தையல்கள் போடப்பட்ட நிலையில், மனைவி உயிரிழந்துவிடுவாரோ என்ற பயத்தில் இருந்து வந்த மணிகண்டன், வீட்டின் படுக்கையறையில் இருக்கும் மின்விசிறியில் (Husband Suicide) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Mar 06, 2023 02:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).