மார்ச் 06: கோடை காலம் என்றாலே (Summer Season) வெப்பநிலை உயரும், குளிர்ச்சியான இடம், பசுமையான சூழல், தண்ணீருக்காக உடலும்-மனதும் ஏங்கித்தவிக்கும், உடலின் குளிர்ச்சியை ஈடு செய்ய இளநீர் (Natural Drinks), கூழ் உணவுகள், பழச்சாறுகள் போன்றவற்றை குடிப்போம். ஆனால், நமது தேடும் குளுமைக்காக கூடவே ஃபேன், ஃபிரிட்ஜ், ஏ.சி (Fan, Refrigerators, Air Condition) போன்றவற்றை உபயோகம் செய்வோம்.
ஏனெனில் முந்தைய காலங்களில் மரங்களின் (Tree) எண்ணிக்கை கணிசமாக இருந்ததால், உலகளவிலான வெப்பநிலையும் சற்று குறைந்தே இருந்தது. ஆனால், தொழிற்புரட்சிக்கு பின்னர் ஏற்பட்ட மாற்றத்தால் இயற்கை வளங்கள் பல விஷயங்களுக்கு உபயோகம் செய்யப்பட்டன. இயற்கை வேளாண் பூமிகள் அழிக்கப்பட்டன. இவற்றால் வெப்பநிலையும் உயர்ந்தன.
கோடையில் மதிய வேளைகளில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம் (Ice Cream), உள்ளூர் கடையில் (Cool Drinks) இருக்கும் சர்பத் போன்றவை விற்பனையும் சூடுபிடிக்கும். பொதுவாகவே கோடையில் மின்சாதன பொருட்களின் இயக்கம் காரணமாக மின் கட்டணம் என்பது உயரவும் செய்யும். இது பல பட்ஜெட் பத்மநாபன்களுக்கு (How to Control EB Bill During Summer Season) லேசான கலக்கத்தையும் தரும். கோடையில் மின் கட்டணத்தை குறைக்க பல வழிகள் உண்டு.
பழைய மின் பொருட்களை மாற்றுதல் / சர்வீஸ் செய்தல்: ஏசி இருக்கும் வீட்டில் கோடைகாலத்தில் அதிக மின்சாரம் செல்லுபடியாகவும். ஆனால், அதனை தொடர்ந்து இயங்கிக்கொண்டு செல்வது ஏசியின் செயல்திறனில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதனாலும் மின்சாரம் அதிகம் செல்லுபடியாகி மின் கட்டணம் உயரலாம். வெண்டிலேட்டர் பகுதியில் தூசி இருந்து, ஏசி காற்றை ஏற்றுக்கொள்ள சிரமப்பட்டாலும் மின்சாரம் அதிகம் செல்லுபடியாகும். அதனால் அதற்கேற்ப நடவடிக்கையில் ஈடுபடுங்கள். Pregnant Women Died: 2 மணிநேரம் தாமதமான அவசர ஊர்தி சேவை.. 9 மாத கர்ப்பிணியுடன் வயிற்றில் இருந்த சிசுவும் பரிதாப பலி.!
பிரிட்ஜில் கவனம்: ஆய்வு கணக்கீடுகளின்படி, ஒரு ஃபிரிட்ஜ் உள்ள வீட்டில் ஏற்றுக்கொள்ளப்படும் மொத்த மின் நுகர்வில் 15% மொத்த மின் நுகர்வை குளிசாதன பெட்டி எடுத்துக்கொள்கிறது. அதனை அதிக காற்றோட்டம் உள்ள இடத்தில் வைக்க வேண்டும். இதனால் அதற்கு எளிதில் காற்று நுகர்வு கிடைத்து எளிதில் இயங்கும். குறைந்தபட்சம் சுவரில் இருந்து 2 அங்குல இடைவெளியிலாவது இருக்குமாறு பார்க்க வேண்டும்.
பிரிட்ஜை எக்காரணம் கொண்டும் நேரடியாக சூரிய ஒளியில் படும்வகையில் வைக்க வேண்டாம். அதேபோல தொடர் பயன்பாடும் வேண்டாம். ஏசி உட்பட எந்த உபகாரணமாக இருந்தாலும், தேவையான நேரத்தில் மட்டும் உபயோகம் செய்யுங்கள். ஏசியை இரவில் உறங்குவதற்காக 2 முதல் 3 மணிநேர டைமரில் போடுங்கள். குளிர் காற்றுக்கு மின்விசிறி நல்ல உதவி செய்யும்.
கவனம்: நமது வீடுகளில் உள்ள ஏசி அதிக டன் கொண்டவை என்றால், சாதாரணமாகவே அதிக மின்சாரம் ஈர்க்கப்படும். அதேநேரம் கதவுகள், ஜன்னல் திறந்திருந்தால் ஏசி உபயோகம் செய்தும் வீண். அவற்றில் கவனமாக இருங்கள். ஏசியை 21 டிகிரி முதல் 24 டிகிரி வரை உபயோகம் செய்யுங்கள். அதிக குளிர் வேண்டும் என 18 வைத்தீர்கள் என்றால் சிரமம் தான்.
கோடைகாலங்களில் வீட்டின் சுவர்பகுதிகள் முதற்கொண்டு சூடாகும் என்பதால், வீட்டின் அருகில் முடிந்தால் மரங்களை நட்டு வளருங்கள். அவை நீங்கள் நட்டுவைத்த 2 ஆண்டுகளில் பலனை கொடுக்கும். நமது வீடு கோடையில் சூடானால், மின்சாரமும் சூடேறும். அதனால் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருங்கள்.