Avadi Shocker: நகைக்கடையில், துப்பாக்கிமுனையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை.. ஆவடியில் பட்டப்பகலில் பயங்கரம்..!

பட்டப்பகலில் கடைவீதியில் இருக்கும் நகைக்கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த கும்பல் ஒன்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஆவடியில் நிகழ்ந்துள்ளது.

Avadi Shocker: நகைக்கடையில், துப்பாக்கிமுனையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை.. ஆவடியில் பட்டப்பகலில் பயங்கரம்..!
Police Station file pic (Photo Credit: wikipedia)

ஏப்ரல் 15, ஆவடி (Avadi News): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முத்தாபுதுப்பேட்டை பகுதியில் கிருஷ்ணா ஜுவல்லரி மற்றும் அடகுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த ஜுவல்லரி மற்றும் அடகுக்கடையை பிரகாஷ் என்பவர் நடத்தி வருகிறார். இன்று காலை கடையின் உரிமையாளர் வழக்கம்போல கடையை திறந்து போனது பணியை மேற்கொண்டு வந்துள்ளார்.

ரூ.1.50 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை: அச்சமயம், அங்கு இன்னோவா காரில் வந்த 4 பேர் கும்பல், கடையின் உரிமையாளர் பிரகாஷை துப்பாக்கி முனையில் மிரட்டி, கை-கால்களை கட்டிப்போட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. மொத்தமாக ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. Best Smart TV's Under Rs.20,000: ரூ.20,000-க்குள் நீங்கள் வாங்க நினைக்கும் அசத்தல் ஸ்மார்ட் டிவி; அட்டகாசமான தகவல் இதோ.! 

காவல்துறை தீவிர விசாரணை: இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஆவடி காவல் துறையினர், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து குற்றவாளிகளுக்கு வலைவீசி இருக்கின்றனர். சம்பவ இடத்தில் இருக்கும் சிசிடிவி கேமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டு, குற்றவாளிகள் எங்கு சென்று இருப்பார்கள் என கணிக்கப்பட்டு விசாரணை தொடருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் தொற்றிக்கொண்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Apr 15, 2024 03:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).