MI 40 Inch Full HD Smart TV | Realme Smart TV X FHD 43 inches (Photo Credit: Mi.com / Amazon.com)

ஏப்ரல் 15, சென்னை (Chennai): கோடை விடுமுறை தொடங்கிவிட்டாலே குளுகுளு சுற்றுலாத் (Holiday Vacation) தலத்திற்கு செல்வது, குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது என பெற்றோர்களின் கடமை அதிகரிக்கும். அதேவேளையில் ஆண்டின் 11 மாதங்கள் முழுநேரம் படிப்பில் கவனம் செலுத்தும் குழந்தைகள், தங்களுக்கு கிடைக்கும் ஒன்றரை மாத விடுமுறையில் தங்களுக்கு பிடித்த வகையில் நேரத்தை செலவிடவும் திட்டமிடுகிறார்கள்.

செல்போன், டிவி, வீடியோ கேம்: முன்பெல்லாம் விடுமுறை கிடைத்தால் தனது பாட்டி அல்லது அத்தை என உறவினர்கள் வீட்டிற்கு படையெடுத்த இளசுகள் மற்றும் சிறார்கள், இன்றளவில் ஸ்மார்ட்போன் (Smartphones) ஆதிக்கம் காரணமாக வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இவர்களின் பிரதான பொழுதுபோக்கு ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் டிவி (Smart TV) பக்கம் திரும்பி இருக்கிறது. இவையெல்லாம் போதாதென வீடியோ கேம் ஆதிக்கமும் அதிகரிக்கும். Realme P1 Series Launch: ரியல்மி பி1 5ஜி மற்றும் ரியல்மி பி1 ப்ரோ 5ஜி போன் வெளியீடு.. அதன் சிறப்பம்சங்கள் என்ன?.!

ரூ.20 ஆயிரத்திற்குள் அட்டகாசமான ஸ்மார்ட் டிவி: ஆதலால் இந்த இரண்டு மாதங்கள் வீடுகளில் இருக்கும் குழந்தைகளை கவனிக்கும் பெரும்பொறுப்பு பெற்றோரிடம் அதிகரித்துவிடும். இவ்வாறான தருணத்தில் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட நினைக்கும் பெற்றோர் மற்றும் பொதுவான திரை ரசிகர்கள், தற்போதைய தொழில்நுட்ப உலகுக்கேற்ப ஸ்மார்ட் டிவிக்கள் வாங்கி வீட்டில் வைத்து பயன்படுத்தலாம். அந்த வகையில், ரூ.20 ஆயிரத்திற்கும் (Smart TV Under Rs.20,000) விற்பனை செய்யப்படும் தரமான ஸ்மார்ட் டிவி குறித்த சிறப்பு செய்தித்தொகுப்பு உங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

எம்ஐ 40 இன்ச் எச்டி டிவி (Mi 40 Inch Full HD TV, 4A Horizon Edition): எம்ஐ நிறுவனத்தின் அட்டகாசமான ஸ்மார்ட் டிவிக்களில், பட்ஜெட் விலையில் கிடைக்கும் எம்ஐ 40 இன்ச் எச்டி டிவி, சந்தையில் ரூ.19,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட் டிவி, ஆண்ட்ராய்டு ஓஎஸ் இயங்குதளம், 1 GB ரேம், எல்இடி திறன் கொண்டது. Moto G64 5G Launch: “நண்டு சிண்டுலாம் புது மொபைல் விடுது.. முன்னோடி நான் விடமாட்டேனா..” மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு..!

Smart TV (Photo Credit: Pixabay)

ரியல்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் எப்எச்டி 43 இன்ச் (Realme Smart TV X FHD 43-inch): ரியல்மி நிறுவனத்தின் அட்டகாசமான ஸ்மார்ட் டிவிக்களில், பட்ஜெட் விலையில் கிடைக்கும் ரியல்மி 43 இன்ச் எப்எச்டி டிவி, சந்தையில் ரூ.19,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரலில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட் டிவி, ஆண்ட்ராய்டு ஓஎஸ் இயங்குதளம், 1 GB ரேம், 8 GB ஸ்டோரேஜ், எல்இடி திறன் கொண்டது.

சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ 40 இன்ச் (Xiaomi Smart TV 5A 40-Inch): சியோமி நிறுவனத்தின் அட்டகாசமான ஸ்மார்ட் டிவியில், சியோமி 40 இன்ச் ஸ்மார்ட் டிவி, சந்தையில் ரூ.19,190 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டு வெளியிடப்பட்ட சியோமி 40 இன்ச் 5ஏ ஸ்மார்ட் டிவி, 1.5 GB ரேம், 8 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்ட் ஓஎஸ், எல்இடி திறன் கொண்டது ஆகும். Instagram Nudity Protection Update: இன்ஸ்டாகிராம் சாட்டில் இனி ஆபாச பட மெசேஜ் வாராது; அதிரடி காட்டிய மெட்டா.. அசத்தல் அப்டேட் இதோ.!

இன்பினிக்ஸ் 43 இன்ச் எக்ஸ்3 எல்இடி ஸ்மார்ட் டிவி (Infinix 43-Inch X3 LED Smart TV): இன்பினிக்ஸ் நிறுவனத்தின் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி 2022ம் ஆண்டு வெளியிடப்பட்டது ஆகும். 1 GB ரேம், 8 GB ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்ட் ஓஎஸ், டால்பி ஆடியோ சிஸ்டம் உட்பட பல அம்சங்கள் உள்ளது. திரையரங்கில் இருப்பதைப்போல நல்ல அனுபவத்தையும் இன்பினிக்ஸ் கொடுக்கும். இது சந்தையில் ரூ.19,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.20 ஆயிரத்திற்குள், உயரிய தரத்துடன் கிடைக்கும் கீழ்காணும் டிவிக்களில் நம்பத்தன்மை அதிகம். ஆதலால் ஸ்மார்ட் டிவி இல்லாமல் ரூ.20 ஆயிரத்திற்குள் டிவி வாங்க நினைப்போர் ஒனிடா 32 இன்ச் எல்இடி எச்டி டிவி (விலை ரூ.19,690), சோனி 32 இன்ச் எல்இடி எச்டி டிவி (Sony 32 Inch LED HD Ready TV (VMD32HH0ZF) (விலை ரூ.19,964), பானாசோனிக் 32 இன்ச் எல்இடி எச்டி டிவி (VIERATH-32DS500S) விலை ரூ.19,962, சாம்சங் 32 இன்ச், விடியோகான் 32 இன்ச் ஆகியவற்றை வாங்கலாம்.

ஸ்மார்ட் டிவியை வாங்க நினைப்போர், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நேரடி இணையப்பக்கத்தை அணுகி ஸ்மார்ட் டிவி வாங்கவும் செய்யலாம்.