Gold Rate Today: மெல்ல உயரத்தொடங்கும் தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரம் என்ன?.!
சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 கணிசமாக உயர்ந்துள்ளது.
ஜூலை 10, சென்னை (Gold Price Today): மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்கள் என பல காரணத்தால் தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை (Gold Price) சவரனுக்கு ரூ.74,000ஐ கடந்திருந்தது.
படிப்படியாக உயரும் தங்கம் விலை :
சவரன் தங்கம் விலை அதன் உற்பத்தி, நுகர்வு உட்பட பல விஷயங்களை அடிப்படையாக கொண்டு தினமும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் பங்குச்சந்தை நிலவரத்தை பொருத்தும் தங்கத்தின் விலை தினமும் மாற்றமடையும். ஜூலை மாதத்தின் தொடக்கத்திலிருந்து அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை இந்த வார தொடக்கத்திலேயே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு.. 2,299 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?.!
தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):
ஜூலை 10ஆம் தேதியான இன்று வியாழன்கிழமை, தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இன்று (ஜூலை 10) 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.9,020க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,160 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் (Silver) விலையை பொறுத்தவரையில் எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000 க்கு விற்பனையாகிறது.
(The above story first appeared on LatestLY on Jul 10, 2025 09:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

