ஜூலை 09, சென்னை (Chennai News): தமிழ்நாடு முழுவதும் வருவாய் கிராமங்களில் காலியாக இருக்கும் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு அறிவிப்பு (Tamilnadu Government Job) வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு வேலைக்காக காத்திருப்போர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தினால் கிராம உதவியாளராக தேர்வு செய்யப்படலாம். அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு இணைக்கப்பட்டுள்ளது. 6 மாத குழந்தைக்கு அறிவுத்திறன் பயிற்சி.. தவறான தகவலை பரப்பிய ரோபோ சங்கரின் மகள்.!
பணி விபரங்கள் :
பணி: கிராம உதவியாளர்
காலிப்பணியிடங்கள் : 2,299
கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயதுவரம்பு : 21 முதல் 32 வயது உட்பட்டவர்கள்
சம்பளம் : ரூ.11,100 முதல் ரூ.35,100
தேர்வு முறை : ஆவண சரிபார்ப்பு, எழுத்து தேர்வு நடைபெற்று தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி : ஆகஸ்ட் 5, 2025
தேர்வு நடைபெறும் தேதி : செப்டம்பர் 5, 2025
பணி சார்ந்த நிபந்தனைகள் : விண்ணப்பிக்க தகுதியுடையவர் அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். கிராமத்தின் காலிப்பணியிடத்தை பொறுத்து அந்தந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் அவரவர்களின் மாவட்ட வலைதள பக்கத்தில் பணிக்கான விண்ணப்பம் பதிவேற்றப்பட்டிருக்கும். அதனை நகலெடுத்து பூர்த்தி செய்த பின் மாவட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.