Gold Rate Today: கணிசமாக உயரும் தங்கம் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!
சென்னையில் இன்று ஆபரணதங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து ரூ.73,000 ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
ஜூலை 21, சென்னை (Gold Price Today): மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்கள் என பல காரணத்தால் தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை (Gold Price) சவரனுக்கு ரூ.74,000ஐ கடந்திருந்தது. Aadi Special Recipe: அம்மன் கோவில் கூழ் செய்வது எப்படி?.. ஆடி மாத ஸ்பெஷல் ரெசிபி இதோ.!
மீண்டும் உயரும் தங்கம் & வெள்ளி விலை :
சவரன் தங்கம் விலை அதன் உற்பத்தி, நுகர்வு உட்பட பல விஷயங்களை அடிப்படையாக கொண்டு தினமும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் பங்குச்சந்தை நிலவரத்தை பொருத்தும் தங்கத்தின் விலை தினமும் மாற்றமடையும். ஜூலை மாதத்தின் தொடக்கத்திலிருந்து அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை இந்த வார தொடக்கத்திலேயே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):
ஜூலை 21ஆம் தேதியான இன்று திங்கட்கிழமை, தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று (ஜூலை 21) 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.9,180க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.73,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் (Silver) விலையை பொறுத்தவரையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,26,000 க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் அதற்கு சமமாக வெள்ளியின் விளையும் உயர்ந்து வருகிறது.
(The above story first appeared on LatestLY on Jul 21, 2025 10:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

