ஜூலை 20, சென்னை (Cooking Tips Tamil): ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில் கூழ் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். கேழ்வரகில் எதிர்ப்பு சக்தி மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை உண்டு. இது பசியை ஆற்றுவதோடு உடலுக்கு சிறந்த மருந்தாகவும் விளங்குகிறது. ஆடி மாதத்தின் தொடக்கத்திலிருந்து அம்மன் கோவில்களில் பாடல்கள் ஒலித்து கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கேழ்வரகு கூழ் வழங்குவர். இன்று வீட்டிலேயே அதனை எப்படி செய்யலாம் என காணலாம். Aadi Masam: ஆடி மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது ஏன்? விளக்கம் இதோ.!
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 2 கப்,
ஊறவைத்த அரிசி - 1/2 கப்,
தண்ணீர் - தேவையான அளவு,
மோர் - 3 கப்,
வெங்காயம் - 3,
பச்சை மிளகாய் - 3,
மாங்காய் - 2.
செய்முறை :
- முதலில் கேழ்வரகு மாவினை தண்ணீரில் சேர்த்து 5 மணிநேரம் வரை அப்படியே வைக்க வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அரிசியை வேக வைக்க வேண்டும்.
- அடுத்து கேழ்வரகு மாவுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து குறைவான தீயில் கெட்டியாகும் வரை கிளற வேண்டும். இதன் பின் கேழ்வரகு மாவுடன் அரிசியை சேர்த்து குளிர்வித்து மோரையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
- இறுதியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மாங்காய், தேவையான அளவு உப்பு சேர்த்தால் அம்மன் கோவிலில் வழங்கப்படும் கேழ்வரகு கூழ் வீட்டிலேயே தயாராகிவிடும்.