Gold Rate Today: இல்லத்தரசிகள் தலையில் இடி.. ரூ.75,000-ஐ கடந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ..!

சென்னையில் இன்று ஆபரணதங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து ரூ.75,000ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

Gold Rate Today: இல்லத்தரசிகள் தலையில் இடி.. ரூ.75,000-ஐ கடந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ..!
Today Gold Price (Photo Credit: Pixabay)

ஜூலை 23, சென்னை (Gold Price Today): மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்கள் என பல காரணத்தால் தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை (Gold Price) சவரனுக்கு ரூ.74,000ஐ கடந்திருந்தது. MK Stalin Hospitalised: நலமுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின்.. உறுதி செய்த துணை முதல்வர் உதயநிதி.! 

அதிரடியாக உயர்ந்தது தங்கம் & வெள்ளி விலை :

சவரன் தங்கம் விலை அதன் உற்பத்தி, நுகர்வு உட்பட பல விஷயங்களை அடிப்படையாக கொண்டு தினமும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் பங்குச்சந்தை நிலவரத்தை பொருத்தும் தங்கத்தின் விலை தினமும் மாற்றமடையும். ஜூலை மாதத்தின் தொடக்கத்திலிருந்து அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை இந்த வார தொடக்கத்திலேயே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):

இந்த நிலையில் ஜூலை 23ஆம் தேதியான இன்று புதன்கிழமை, தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று (ஜூலை 23) 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.9,380க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.75,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் (Silver) விலையை பொறுத்தவரையில் ரூ.1000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.1,29,000 க்கு விற்பனையாகிறது. இன்றைய தங்கத்தின் விலையானது ரூ.75,000ஐ கடந்து மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தங்கத்தின் விலைக்கு ஈடாக வெள்ளியும் டாப் ரேட்டில் உயர்ந்து வருகிறது.

(The above story first appeared on LatestLY on Jul 23, 2025 09:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).