Chennai Apollo | MK Stalin (Photo Credit: @mrs_roh08 X)

ஜூலை 22, கிரீம்வேஸ் சாலை (Chennai News): தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் (TN CM MK Stalin) நேற்று தலைசுற்றல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள கிரீன்வேஸ் அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்தனர். முதற்கட்டமாக முதல்வருக்கு தலைசுற்றல் தொடர்பான உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இரண்டு நாட்கள் ஓய்வு பெற வேண்டும் என அறிவித்திருந்தனர். Jagdeep Dhankhar: துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ராஜினாமா.. காரணம் என்ன..?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்:

இந்நிலையில், இன்று ஜூலை 23ஆம் தேதி இரண்டாவது நாளாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை உடல் நலப் பரிசோதனைக்காக தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்று இருந்த முதல்வர், பின் மீண்டும் கிரீன்வேஸ் அப்பலோ மருத்துவமனைக்கு வந்தடைந்தார். முதல்வரின் உடல்நிலை குறித்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "முதல்வர் ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார். மருத்துவர்கள் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கின்றனர்" என தெரிவித்தார்.