Gold Rate Today: உயர்ந்த வேகத்தில் சரிவை சந்தித்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய தங்கத்தின் விலை என்ன?.!
சென்னையில் இன்று ஆபரணதங்கத்தின் விலை சரிவை சந்தித்து ரூ.73,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஜூலை 25, சென்னை (Gold Price Today): மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்கள் என பல காரணத்தால் தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை (Gold Price) சவரனுக்கு ரூ.74,000ஐ கடந்திருந்தது. Aadi Velli 2025: கடன் தொல்லை தீர.. அம்மன் வீடு தேடி வர.. ஆடி வெள்ளியில் செய்யவேண்டிய பூஜை, விரதம்.!
சரிந்தது தங்கம் & வெள்ளி விலை :
சவரன் தங்கம் விலை அதன் உற்பத்தி, நுகர்வு உட்பட பல விஷயங்களை அடிப்படையாக கொண்டு தினமும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் பங்குச்சந்தை நிலவரத்தை பொருத்தும் தங்கத்தின் விலை தினமும் மாற்றமடையும். ஜூலை மாதத்தின் தொடக்கத்திலிருந்து அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை இந்த வார தொடக்கத்திலேயே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஜூலை 25ஆம் தேதியான இன்று வெள்ளிக்கிழமை, தங்கத்தின் விலை சரிந்துள்ளது.
தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):
இன்று (ஜூலை 25) 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, கிராம் தங்கம் ரூ.9,210க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் (Silver) விலையை பொறுத்தவரையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,28,000 க்கு விற்பனையாகிறது. கடந்த புதன்கிழமை தங்கத்தின் விலையானது ரூ.75,000ஐ கடந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.
(The above story first appeared on LatestLY on Jul 25, 2025 10:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

