ஜூலை 25, சென்னை (Spritual News): ஆன்மீகப்பிரியர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாதம் ஆடி மாதம். இந்த மாதத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் அம்மனுக்கு வழிபாடு செய்ய உகந்த நாட்களாகவும் கருதப்படுகிறது. ஆடி வெள்ளியன்று (Aadi Velli 2025) அம்மனை வழிபட்டால் பொன், பொருள் தேடி வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆடி வெள்ளி வழிபாடு செய்வது ஐஸ்வர்யங்களையும், சௌபாக்கியங்களையும் நமக்கு அள்ளித்தரும் என்பது முன்னோர்களின் கூற்று. Aadi Amavasai 2025: ஆடி அமாவாசையில் தர்ப்பணம், திதி கொடுக்க ஏற்ற நேரம், விரத முறை, பலன்கள்.. முழு விபரம் உள்ளே.!
ஆடி வெள்ளியில் மாவிளக்கு பூஜை செய்வது எப்படி? :
இதனால் திருமணத்தடை விலகும். குழந்தை பாக்கியம் ஏற்படும். தோஷங்கள் நிவர்த்தியாகும். தீராத நோய்களும் தீரும். செல்வ வளம் பெருகும் எனவும் கூறப்படுகிறது. இந்த நாளில் வீடு, கோவில்களில் மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிபடுவது நல்லது. மாவிளக்கு ஏற்றி பூஜை செய்வது வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என நம்பப்படுகிறது. பச்சரிசியை இடித்து வெல்லம், ஏலக்காய், நெய் சேர்த்து நெய் ஊற்றி விளக்கேற்றுவதே மாவிளக்கு ஆகும்.
ஆடி வெள்ளி விரதம் :
ஆடி வெள்ளிக்கிழமையில் பெண்கள் அம்மனை விரதம் இருந்து வழிபடுவது நல்லது. பால், பழம், வெள்ளரிக்காய் போன்றவற்றை மட்டும் உண்டு விரத வழிபாடு செய்வதால் வேண்டியது கிட்டும் என நம்பப்படுகிறது. அவியல், பாயாசம், சுண்டல் படைத்தும் வழிபாடு செய்யலாம். ஆடி வெள்ளி நாளில் காலையிலேயே வீட்டு வாசலில் வேப்பிலை வைத்து கட்டி வழிபடுவது நல்லது. சொம்பில் நீர் ஊற்றி அதனுடன் குங்குமம், மஞ்சள் தூள், வேப்ப இலைகளை சேர்த்து பூஜையறையில் வைத்தும் வழிபடலாம்.
கடன் தொல்லைகள் தீர வழிபாடு :
கடன் தொல்லைகள் தீர பூஜையறையில் தீபம் ஏற்றி, தட்டில் குங்குமப் பொட்டு வைத்து கல் உப்பு பரப்பி, அதன் மீது அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம். அம்மன் மந்திரத்தை 108 முறை கூறி வழிபடுவது, 'ஓம் பராசக்தி' என்ற மந்திரத்தை 108 முறை கூறி வழிபடுவது விரைவில் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க வழிவகை செய்யும்.