Gold Rate Today: தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. வார இறுதியில் தித்திப்பு செய்தி.!

சென்னையில் இன்று ஆபரணதங்கத்தின் விலை சரிவை சந்தித்து ரூ.73,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Rate Today: தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. வார இறுதியில் தித்திப்பு செய்தி.!
Today Gold Price (Photo Credit: Pixabay)

ஜூலை 26, சென்னை (Gold Price Today): மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்கள் என பல காரணத்தால் தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை (Gold Price) சவரனுக்கு ரூ.74,000ஐ கடந்திருந்தது. யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க டயட்.. மூச்சடைத்து உயிரிழந்த கன்னியாகுமரி சிறுவன்.! 

தொடர்ந்து குறையும் தங்கம் & வெள்ளி விலை :

சவரன் தங்கம் விலை அதன் உற்பத்தி, நுகர்வு உட்பட பல விஷயங்களை அடிப்படையாக கொண்டு தினமும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் பங்குச்சந்தை நிலவரத்தை பொருத்தும் தங்கத்தின் விலை தினமும் மாற்றமடையும். ஜூலை மாதத்தின் தொடக்கத்திலிருந்து அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை இந்த வார தொடக்கத்திலேயே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஜூலை 26ஆம் தேதியான இன்று சனிக்கிழமை, தங்கத்தின் விலை சரிந்துள்ளது.

தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):

இன்று (ஜூலை 26) 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, கிராம் தங்கம் ரூ.9,160க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் (Silver) விலையை பொறுத்தவரையில் ரூ.2000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.1,26,000 க்கு விற்பனையாகிறது. கடந்த புதன்கிழமை தங்கத்தின் விலையானது ரூ.75,000ஐ கடந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.

(The above story first appeared on LatestLY on Jul 26, 2025 09:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).